Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்மிருதி இரானி கார் விபத்து: அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார்

ஸ்மிருதி இரானி கார் விபத்து: அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார்

Webdunia
ஞாயிறு, 6 மார்ச் 2016 (12:33 IST)
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி நேற்று நள்ளிரவு கார் விபத்தில் சிக்கினார். அதிர்ஷ்ட வசமாக கை, மற்றும் காலில் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார்.


 
 
உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் நேற்று நடைபெற்ற பாஜக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு நள்ளிரவு காரில் டெல்லி திரும்பி கொண்டிருந்தார். யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது அவரது கார் முன்னாடி சென்று கொண்டிருந்த பாதுகாப்பு காரின் மீது மோதியது.
 
இதில் ஸ்மிருதி இரானிக்கு கை மற்றும் காலில் சிறிய காயம் ஏற்பட்டது. காயங்கள் பெரிய அளவில் இருக்கவில்லை என்பதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை.
 
அதே பகுதியில் நேற்று இரு சக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் எதிரே வந்த காரில் மோதி பலியானர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
தனது டுவிட்டர் பக்கத்தில் ஸ்மிருதி இரானி கூறும் போது நான் நலமுடன் உள்ளேன் என்மீது அக்கறையுடன் விசாரித்த அனைவருக்கும் நன்றி என கூறியுள்ளார். மேலும் விபத்தில் காயம் அடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் அவர்கள் நலம் பெற பிரார்தனை செய்வதாக ஸ்மிருதி இரானி கூறினார்.

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

Show comments