Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காலம் போன கடைசியில் சங்கரா.... சங்கரா...! - பண விவகாரத்தில் மோடி

Webdunia
புதன், 23 நவம்பர் 2016 (10:54 IST)
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட விஷயத்தில், பொதுமக்கள் அரசுக்கு ஏதாவது யோசனை சொல்ல விரும்பினால் சொல்லலாம் என்று பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார்.


 

கடந்த 8ஆம் தேதி நள்ளிரவு முதல் பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. இதனால், பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் பெரும் சிரமம் நீடித்து வருவதோடு, பணப் புழக்கமும் வெகுவாக குறைந்துள்ளது.

இந்நிலையில், இந்த விஷயத்தில் பொதுமக்கள் அரசுக்கு ஏதாவது யோசனை சொல்ல விரும்பினால் சொல்லலாம் என்று தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மோடி, “ரூபாய் நோட்டுகள் தொடர்பாக மத்திய அரசு எடுத்துள்ள முடிவு பற்றிமக்களின் கருத்து என்ன?என்பதை அறிய விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த சர்வே-க்காக, தனது ட்விட்டர் பக்கத்தில் “என்.எம்.ஆப்” என்ற செயலியையும் மோடி இணைத்துள்ளார். அதில், 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு தொடர்பாக சில கேள்விகள் கேட்கப்பட்டு உள்ளன.

குறிப்பாக, இந்தியாவில் கறுப்புப் பணம் உள்ளது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? ஊழல் மற்றும் கறுப்புப் பணத்திற்கு எதிராக போராடி வெற்றிபெற வேண்டுமா? வேண்டாமா? 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மோடி அரசின் நடவடிக்கை குறித்து உங்களுடைய கருத்து? மோடியிடம் பகிர்ந்து கொள்ள உங்களிடம் ஏதாவது கருத்துக்கள், யோசனைகள் இருக்கின்றனவா? என்று கேட்கப்பட்டு உள்ளது.

மோடி அறிவித்து இரண்டு வாரங்களுக்கு மேலாகிவிட்ட நிலையில், பல இறப்புகள், பல சிரமங்கள். பல இன்னல்களை பொதுமக்கள் அனுபவித்த பின்பு உருப்படியான செயல்பாடுகள் எதுவும் இன்றி, திடீரென இவ்வாறு அறிவித்துள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

உத்திரப்பிரதேசம், பஞ்சாப், கோவா ஆகிய மாநிலங்களில் நடைபெறவுள்ள தேர்தல்களை மனதில் கொண்டே இந்த அறிவிப்பை மோடி வெளியிட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆப்பிள் மேல் அப்கிரேட்… மதுரையில் உலாவரும் வேன்!

2 வயது பச்சிளம் குழந்தை சர்க்கரை நோய்க்கு பலி.. தேனியில் அதிர்ச்சி சம்பவம்..!

தமிழகத்தில் ஜூன் 19 வரை மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

பாஜக தோல்விக்கு மாநில தலைவர் தான் காரணம்.. அரைநிர்வாண போராட்டம் நடத்தியவர் டிஸ்மிஸ்..!

சனி, ஞாயிறு, திங்கள் தொடர் விடுமுறை: திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments