Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விபத்தில் சிக்கிய மியான்மர் ராணுவ விமானம்..! 6 பேர் படுகாயம்..!

Senthil Velan
செவ்வாய், 23 ஜனவரி 2024 (15:30 IST)
மிசோரம் அருகே மியான்மர் நாட்டின் ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயம் அடைந்தனர். 
 
மியான்மர் ராணுவ ஆட்சிக்கு எதிராக ஆயுத குழுக்கள் போரில் ஈடுபட்டு வருகின்றன. இந்திய எல்லையில் உள்ள மியான்மர் பகுதிகளை இந்த ஆயுதக் குழுக்கள் கைப்பற்றி வருகின்றனர்.  இதனையடுத்து மியான்மர் ராணுவ வீரர்கள் இந்திய பகுதிக்குள் நுழைந்து இந்திய பாதுகாப்பு படையினரிடம் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.
 
இதுவரை 200க்கும் மேற்பட்ட மியான்மர் ராணுவ வீரர்கள்,  இந்தியாவுக்குள் நுழைந்து தஞ்சம் அடைந்துள்ளனர்.  பாதுகாப்பு படையினர் இவர்களை மியான்மர் ராணுவத்திடம் ஒப்படைத்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் 184 மியான்மர் ராணுவ வீரர்களை இந்திய பாதுகாப்பு படையினர் அந்நாட்டிடம் ஒப்படைக்க தயாராக இருந்தனர்.  இந்த ராணுவ விரர்களை அழைத்து செல்வதற்காக மிசோரம் மாநிலத்தின் லெங்குபி விமான நிலையத்தில் மியான்மர் ராணுவ விமானம் தரை இறங்கியது. அப்போது அந்த விமானம் திடீரென விபத்திக்குள்ளானது. 

ALSO READ: அமெரிக்காவில் துப்பாக்கி சூடு! 8 பேரை கொன்ற மர்மநபர்.!!

விமானத்தில் விமானி உட்பட 14 பேர் இருந்த நிலையில், 6 பேர் காயமடைந்தனர்.   8 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.  காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments