Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தகுதியில்லை: சுப்பிரமணியன் சாமியின் அடுத்த இலக்கு

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தகுதியில்லை: சுப்பிரமணியன் சாமியின் அடுத்த இலக்கு
, செவ்வாய், 21 ஜூன் 2016 (08:21 IST)
பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி எப்பொழுதுமே சர்ச்சைகளுடனே பேசி செய்திகளில் வலம் வருவார். சமீப காலமாக ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் பதிவி விலக வேண்டும் என பகிரங்கமாக அளுத்தம் கொடுத்து, அதில் கிட்டத்தட்ட வெற்றியும் பெற்றுவிட்டார்.


 
 
இந்நிலையில் அவர் தற்போது தனது அடுத்த இலக்காக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை நிலை கவர்னர் நஜிப் ஜுங் ஆகியோரை பதவியிலிருந்து விரட்டுவதே என அறிவித்துள்ளார்.
 
பாஜக எம்.பி மகேஷ் கிர், கொலை குற்றவாளிக்கு ஆதரவாக செயல்படுவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார். இதனையடுத்து தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறி எம்.பி. மகேஷ் கிர், அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டின் முன்பு இருந்து உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்.
 
இந்த உண்ணாவிரதத்துக்கு ஆதரவு தெரிவித்து அதில் கலந்து கொண்ட சுப்பிரமணியன் சாமி, ஆளும் பாஜக எம்.பி. ஒருவர் அறப்போராட்டம் நடத்துகிறார். அவருக்கு உரிய பாதுகாப்பு தர தவறிவிட்டார் துணை நிலை கவர்னர் நஜிம் ஜுங். துணை நிலை கவனர் மற்றும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலும் ஆகியோர் பதவியில் ஒட்டி கொண்டிருக்க தகுதியில்லை என்றார்.
 
மேலும், கெஜ்ரிவால், துணை நிலை கவர்னர் நஜிப் ஜுங் ஆகியோரை பதவியில் இருந்து நீக்குவதே தனது அடுத்த இலக்கு எனவும், துணை நிலை கவர்னர் நஜிப் ஜுங், சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் அகமது படேலின் ஆதரவாளர்.
 
நஜிப் ஜுங் தற்பொழுது வரை அவருடன் தொடர்பில் உள்ளதால் அவரை நீக்க வேண்டும். கெஜ்ரிவால் அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என சுப்பிரமணியன் சாமி கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இதுபற்றி பேச திமுகவிற்கு எந்த அருகதையும் இல்லை : ஜெயலலிதா ஆவேசம்