Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லைவ் வீடியோவில் யூட்யூபருக்கு முத்தம் கொடுக்க முயற்சி! – மும்பையில் இருவர் கைது!

Webdunia
வியாழன், 1 டிசம்பர் 2022 (15:45 IST)
மும்பையில் தென்கொரிய பெண் ஒருவர் யூட்யூப் லைவ் செய்து கொண்டிருந்தபோது பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மும்பையில் உள்ள கர் பகுதியில் தென் கொரியாவை சேர்ந்த யூட்யூபர் பெண் ஒருவர் தனது பார்வையாளர்களுக்கு அப்பகுதியை லைவ் ஸ்ட்ரீமிங்கில் காட்டி பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த நபர் ஒருவர் அந்த பெண்ணின் கையை பிடிப்பதும், முத்தம் கொடுக்க முயல்வதுமாக நடந்து கொண்டுள்ளார்.

மேலும் தனக்கு தெரிந்த ஆங்கிலத்தை பயன்படுத்தி அவரை ஸ்கூட்டரில் ஏறுமாறு அழைத்துள்ளார், அந்த பெண் அதற்கு ‘நோ’ என்று மறுத்து அந்த இடத்தை விட்டு நழுவி சென்றுள்ளார். அப்போதும் கூட தனது நண்பர் ஒருவரையும் ஸ்கூட்டரில் ஏற்றிக் கொண்டு அந்த பெண்ணை பின்தொடர்ந்து வந்து அந்த நபர் தொல்லை கொடுத்துள்ளார்.

இது அனைத்தும் லைவ் ஸ்ட்ரீமிங்கில் ஒளிபரப்பான நிலையில் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த மும்பை போலீஸார் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற இருவரையும் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கத்தியால் கிழித்தனர், எலும்பு முறிவுகளும் ஏற்பட்டது: கரூர் துயர சம்பவத்தை நேரில் கண்ட பெண்மணி வாக்குமூலம்

இளம்பெண்ணை கற்பழித்த காவலர்கள்.. இந்த வெட்கக்கேடான நிலைக்கு பொம்மை முதல்வரின் திமுக அரசு தலைகுனிய வேண்டும். ஈபிஎஸ்

அக்டோபர் 3, வெள்ளிக்கிழமையும் பொது விடுமுறையா? தமிழக அரசு பரிசீலனை..!

ஆர்சிபி அணி விற்பனைக்கு வருகிறதா? ஐபிஎல் அரங்கில் பெரும் பரபரப்பு!

ரூ.35 கோடி மதிப்புள்ள போதைபொருளுடன் பிரபல நடிகர் கைது.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்