Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பையில் பள்ளியில் 4 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: ஆசிரியர் கைது

Webdunia
வியாழன், 18 டிசம்பர் 2014 (15:57 IST)
மும்பை புறநகர் பாந்தூப் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் தற்காலிக ஆசிரியராக வேலை பார்ப்பவர் கேசரி உபாத்யாய். இங்கு அதே பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமி பிரி.கே.ஜி. வகுப்பில் படித்து வந்தாள். டிசமபர் 9ஆம் தேதி ஆசிரியர் கேசரி உபாத்யாய் (வயது 32) 4 வயது சிறுமியை கழிவறைக்கு அழைத்துச் சென்று  பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்.
 
இந்த சம்பவம் குறித்து முதலில், சிறுமி வீட்டில் யாரிடமும் சொல்லைவில்லை. ஆனால் வயிற்று வலி எனக்கூறி பள்ளிக்கூடம் செல்ல சிறுமி மறுத்து வந்துள்ளார். முதலாக சிறுமியின் பாட்டிக்கு விவரம் தெரியவந்துள்ளது. அவர் பெற்றோர்களிடம் கூறியுள்ளார். சிறுமி டிசம்பர் 12ஆம் தேதி ராஜ்வாடி மருத்துவமனையில் சிறுமி சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
 
பெற்றோர்கள் இந்த சம்பவம் குறித்து யாரிடமும் கூறவில்லை. குறிப்பாக டாக்டரிடம் கூட அவர்கள் தெரிவிக்கவில்லை. அவமானத்திற்கு பயந்து அவர்கள் வெளியில் சொல்லவில்லை. மேலும் போலீஸ் புகார் செய்யவும் இல்லை. அரசல் புரசலாக பக்கத்தில் உள்ளவர்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் விவரம் தெரியவந்ததும் அவர்கள் பெற்றோர்களிடம் வற்புறுத்தி  புகார் கொடுக்கச் செய்துள்ளனர்.
 
பின்னர் பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் சிறுமியின் பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்டுள்ளனர். அங்கிருந்த பொருட்களை சேதபடுத்தியுள்ளனர்.
 
இதையடுத்து காவல்துறையினர் பள்ளிக்கு விரைந்து சென்றனர். ஆசிரியர் கேசரி உபாத்யாயை கைது செய்தனர். அவர் மீது பாலியல் பலாத்காரம் மற்றும் பாலியல்  ரீதியாக துன்புறுத்தல் உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளியில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!