Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெகபூபா முஃப்தி விடுதலை: முக ஸ்டாலின் வரவேற்பு

Webdunia
புதன், 14 அக்டோபர் 2020 (09:59 IST)
மெகபூபா முஃப்தி விடுதலை: முக ஸ்டாலின் வரவேற்பு
ஜம்மு-காஷ்மீரில் தடுப்புக் காவலில் இருந்த மெகபூபா முஃப்தி விடுவிக்கப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். அதேபோல் காஷ்மீரில் அரசியல் ரீதியாக அடைத்துவைக்கப்பட்டுள்ள பிற தலைவர்களையும் விடுவிக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெகபூபா முப்தி இன்று விடுதலை செய்யப்பட்டார் என்ற தகவல் சற்றுமுன் வெளியாகியது. ஜம்முகாஷ்மீரில் 370-வது பிரிவு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்யப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த முப்தி முகமது உள்பட பல அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இடையில் ஒருசில அரசியல் தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
 
இந்த நிலையில் 14 மாத சிறைவாசத்திற்கு பின் தற்போது மெகபூபா முப்தி விடுதலை செய்யப்படுவதாக ஜம்மு காஷ்மீர் அரசு அறிவித்துள்ளது. மெகபூபா முப்தி விடுதலை செய்யப்படுவதாக ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச அரசு அறிவித்துள்ளதை முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, காங்கிரஸ் பிரமுகர் குலாம்நபி ஆச்சாத் உள்ளிட்டோர் வரவேற்றுள்ளார். இந்த நிலையில் தற்போது திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கலும் முபதி விடுதலைக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்களிடம் கூகுள் Pixel 6a இருக்கிறதா? உங்களுக்கு கூகுள் தருகிறது ரூ.8500.. எப்படி வாங்குவது?

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?

அடுத்த கட்டுரையில்
Show comments