Webdunia - Bharat's app for daily news and videos

Install App

9 லட்சம் லிட்டர் சாராயம் குடித்த எலி: போலீஸ் தகவல்

Webdunia
வெள்ளி, 5 மே 2017 (19:07 IST)
பீகாரில் பறிமுதல் செய்து வைக்கப்பட்டிருந்த 9 லட்சம் லிட்டர் சாராயத்தையும் எலி குடித்து விட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


 

 
பீகாரில் கடந்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பூராண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து மது விலக்கை மீறி கள்ளச் சாராயம் காய்ச்சினாலோ அல்லது விற்பனை செய்தாலோ அதிகபட்சமாக தூக்கு தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஆனால் இருந்தும் தடையை மீறி ஒரு சில இடங்களில் சரக்கு விற்பனை நடந்து வருகிறது. இதுதொடர்பாக காவல்துறையினர் நடத்திய சோதனையில் சுமார் 9 லட்சம் லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. அவை அனைத்தும் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டு இருந்தது.
 
இதுகுறித்து மாநில காவல்துறையினர் கூட்டத்தில் பேச்சு எழுந்துள்ளது. அப்போது சில பாட்டீல்களை அழித்து விட்டதாக கூறிய காவல்துறையினர் எஞ்சிய சரக்குகளை எலிகள் குடித்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
 
இத்தகைய தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுதொடர்பாக பீகார் காவல்துறை அசோசியேஷன் தலைவர் நிர்மல் சிங், மற்றும் உறுப்பினர் ஷாம்ஷெர் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இருவருக்கும் மே 18ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்டாகிராமில் வந்த லிங்க்: க்ளிக் செய்த அடுத்த நிமிடத்தில் பணத்தை இழந்த இளம்பெண்..

ஸ்டெர்லைட் தடையை மறுஆய்வு செய்ய கோரிய மனு : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பாஜக பயப்படுகிறது.. காங்கிரஸ் பிரமுகர் விமர்சனம்..!

மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய இளைஞரின் தாய் மீது புகார்.. நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஐதராபாத்தில் தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கியிருக்கின்றாரா கஸ்தூரி? தனிப்படை விரைவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments