Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாப்பிட மறுத்த குழந்தையை அடித்துக் கொன்ற தாய்

Webdunia
திங்கள், 27 பிப்ரவரி 2017 (20:53 IST)
ஹைதராபாத் நகரில் பமீனா பேகம் என்பவர் தனது 12 வயது குழந்தை சாப்பிட மறுத்ததால் அடித்து கொலை செய்துள்ளார்.
 


 

 
ஹைதராபாத் நகரில் பமீனா பேகம்(35) என்பவர் தனது 3 குழந்தைகளுடன் தனியாக வசிந்து வந்துள்ளார். இவர் கடந்த 5 வருடங்களாக தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறாராம். சம்ப்வம் நடைபெற்ற தினத்தன்று இவரின் 12 வயது இளைய மகன் சாப்பிடாமல் உறவிவிட்டான். பமீனா அந்த சிறுவனை சாப்பிட்டுவிட்டு தூங்க சொல்லி வற்புறுத்தியுள்ளார்.
 
ஆனால் சிறுவன் மறுத்துள்ளான். இதில் ஆத்திரமடைந்த பமீனா தொடர்ந்து கடுமையாக அடித்துள்ளார். அதில் சிறுவன் மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளான். மகன் இறந்து விட்டதை அறிந்த பமீனா பக்கத்து கிராமத்தில் வசித்த தனது தாயை வரவழைத்து யாருக்கும் தெரியாமல் சடலத்தை எரித்து விட முயற்சித்திருக்கிறார். 
 
இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு புகார் அளித்துள்ளனர். பமீனாவும் அவரது தாயாரும் கைது காவல்துறையினரால் செய்யப்பட்டனர்.
 
சிறுவன் இறந்த போது சிறுவன் ரெஹான் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருக்கிறான். உடல்நலமற்ற ஒரு சிறுவனை சாப்பிட மறுத்ததைக் காரணமாக்கி பெற்ற தாயே அடித்துக் கொன்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் தொழில் வரி 35 சதவீதம் உயர்வு: மாநகராட்சி முடிவால் கடும் அதிருப்தி..!

எக்ஸ் தளத்தின் ஐடியை மாற்றிய எலான் மஸ்க்.. புதிய பெயர் என்ன தெரியுமா?

3வது முறையாக நிரம்பும் மேட்டூர் அணை.. உபரி நீரை ஏரிகளில் நிரப்ப ராமதாஸ் கோரிக்கை..!

நாளை மறுநாள் முதல் சென்னை புறநகர் ரயில்களின் நேரம் மாற்றம்: முழு விவரங்கள்..!

கழிவறையில் கூட தங்கம்.. அரவிந்த் கெஜ்ரிவால் குறித்த திடுக்கிடும் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments