Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அயோத்தியில் 22 லட்சம் அகல்விளக்குகள்: தீபாவளி தினத்தில் ஏற்றி சாதனை..!

Webdunia
ஞாயிறு, 12 நவம்பர் 2023 (08:19 IST)
அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் அந்த கோவிலில் தீபாவளியை முன்னிட்டு 22 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றி சாதனை செய்யப்பட்டுள்ளது.  

தீபாவளிக்கு முந்தைய நாளான நேற்று அயோத்தி 22.23 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு  உலக சாதனை செய்ததாகவும் இந்த தீப திருவிழாவில் பொதுமக்கள் தன்னார்வலர்கள் உட்பட ஏராளமான ஒரு கலந்து கொண்டு  அகல் விளக்குகளை மிகவும் ஆர்வத்துடன் ஏற்றியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு முன் கடந்த 2019 ஆம் ஆண்டு 4.10 லட்சம் அகல் விளக்குகள், 2020 ஆம் ஆண்டு 9 லட்சம் அகல் விளக்குகள், ஏற்றப்பட்டு இருந்த நிலையில்  கடந்த ஆண்டு 15 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டது.

இந்த சாதனை தற்போது முறியடிக்கப்பட்டு இந்த ஆண்டு 22.23 இலட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டது என்பதும்  பொதுமக்கள் இந்த அகல் விளக்குகளை பார்த்து ஆச்சரியம் அடைந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை உள்பட பல இடங்களில் கடல் சீற்றம்.. திருச்செந்தூரில் மட்டும் உள்வாங்கிய கடல்..!

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.. சென்னை மாநகராட்சி ஆணையர் முக்கிய தகவல்..!

புயல் நகரும் வேகம் அதிகரிப்பு.. சென்னையில் மெட்ரோ ரயில்கள், பேருந்துகள் இயங்குமா?

மீண்டும் பார்க்கிங் களமாக மாறிய வேளச்சேரி மேம்பாலம்.. சென்னை மக்கள் மீண்டும் உஷார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments