இந்தியாவில் 20 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு: என்ன செய்ய போகிறது அரசு?

Webdunia
வெள்ளி, 7 ஆகஸ்ட் 2020 (08:04 IST)
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே வரும் நிலையில் இந்தியாவில் கொரோனாவிற்கு 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் மத்திய அரசு மற்றும் அனைத்து மாநில அரசுகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது
 
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 20 லட்சத்தை தாண்டி உள்ளது என்றும் சரியாக சொல்ல வேண்டும் என்றால் இந்தியாவில் இதுவரை 20,25,409 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 41,638 பேர் இதுவரை மரணம் அடைந்துள்ளனர் என்றும் இந்தியாவில் கொரோனாவில் இருந்து 13,77,384 பேர்  குணம் அடைந்துள்ளனர் என்றும்  மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 
 
மேலும் இந்தியாவில்  6,05,933 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அமெரிக்கா, பிரேசிலை தொடர்ந்து 20 லட்சம் பேர்களுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்ட 3வது நாடாக இந்தியா மாறியது என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து மத்திய, மாநில அரசுகள் என்ன செய்ய போகிறது? என்ற கேள்வியை எதிர்க்கட்சியினர் எழுப்பியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் இருக்கும் சிக்கல்!.. சமாளிப்பாரா செங்கோட்டையன்!.. ஒரு பார்வை...

திருமணத்திற்கு மறுத்த ஆசிரியை வெட்டி கொலை.. சட்டம் - ஒழுங்கை காப்பாற்றுங்கள்: அன்புமணி கோரிக்கை

4 ஆண்டுகளாக பங்குச்சந்தையில் வர்த்தகம்.. ரூ.35 கோடி ஏமாந்த 72 வயது முதியவர்..!

'டிக்வா' புயல் எச்சரிக்கை: நாளை 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்'!

செங்கோட்டையனை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்: விஜய் வெளியிட்ட அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments