Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடி அலை என்பது சோடா பாட்டில் வாயு போன்றது: சித்து

Webdunia
புதன், 12 டிசம்பர் 2018 (07:35 IST)
ஐந்து மாநிலங்களில் நடந்த தேர்தலில் குறிப்பாக மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜகவுக்கு ஏற்பட்ட தோல்வி அக்கட்சியின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கிவிட்டது. மோடி அலை ஓய்ந்து ராகுல் அலை வீசுவதாகவே பெரும்பாலான அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பஞ்சாப் மாநில அமைச்சரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத்சிங் சித்து, இந்த தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து கூறுகையில், 'மோடி அலை ஓய்ந்துவிட்டது என்றும், மோடி அலை என்பது சோடா பாட்டிலில் உள்ள வாயு போன்றது என்றும், பாட்டிலை திறந்த 2 அல்லது 3 நிமிடங்களில் அது ஆவியாகிவிடுவது போல் மோடி அலை தற்போது முடிவுக்கு வந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

சித்துவின் இந்த விமர்சனத்திற்கு பாஜகவினர் கண்டனமும் காங்கிரஸார் வரவேற்பும் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடமுழக்கிற்கு பின் திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும்: அமைச்சர் சேகர்பாபு..!

எடப்பாடி பழனிசாமிக்கு ஏதோ ஒரு நெருக்கடி.. அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து முத்தரசன் கருத்து

தி.மு.க.,வை வீழ்த்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்; பா.ஜ.,வுடன் கூட்டணி குறித்து ஈபிஎஸ்

இந்துக்கள் பாதுகாப்பாக இருக்கும் வரை முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்: யோகி ஆதித்யநாத்

நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக உயர்த்தப்படும் புதுச்சேரி: முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments