அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி.. அதிபர் ஜோபைடன் அழைப்பு..!

Webdunia
வியாழன், 2 பிப்ரவரி 2023 (14:24 IST)
அமெரிக்கா அதிபர் ஜோபைடனின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி வரும் ஜூன் அல்லது ஜூலையில் அமெரிக்கா செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
அமெரிக்காவுக்கு வருமாறு அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் இந்திய பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதனை அடுத்து ஜூன் அல்லது ஜூலை மாதம் பிரதமர் மோடி அமெரிக்க செல்ல இருப்பதாகவும் வெள்ளை மாளிகையில் மோடி ஜோ பைடன் இருதரப்பு உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது. 
 
பிரதமர் மோடியின் அமெரிக்க பயண தேதி உள்ளிட்டவை அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது 
 
ஜோபைடன் பதவியேற்ற பின் பிரான்ஸ் அதிபர் மட்டுமே இதுவரை அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள நிலையில் தற்போது இந்திய பிரதமர் மோடியும் அரசு முறை பயணமாக அமெரிக்கா செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. வெள்ளியும் திடீரென ரூ.13000 குறைந்ததால் பரபரப்பு..!

ஒரே சமயத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள்.. கனமழை எச்சரிக்கை..!

பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் போரை நிறுத்துவது எல்லாம் எனக்கு ஒரு நிமிட வேலை: டிரம்ப்

ஆர்.எஸ்.எஸ் விழாவில் கலந்து கொண்ட அரசு ஊழியர் சஸ்பெண்ட்.. அரசின் அதிரடி நடவடிக்கை..!

அல்வாவும் ஒரு உணவு தான்.. தேவைப்படும் நேரத்தில் முதல்வர் அதையும் பரிமாறுவார்: சேகர்பாபு

அடுத்த கட்டுரையில்
Show comments