Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வளர்ச்சியை துரிதப்படுத்துவதற்கான தொலைநோக்குத் திட்டங்களுடன் அமைந்தது ரயில்வே பட்ஜெட் - மோடி

Webdunia
புதன், 9 ஜூலை 2014 (08:49 IST)
நாட்டின் வளர்ச்சியை துரிதப்படுத்துவதற்கான தொலைநோக்குத் திட்டங்களுடன் ரயில்வே பட்ஜெட் அமைந்திருப்பது பாராட்டுக்குரியது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
 
இதுகுறித்து அவர், டுவிட்டர் பதிவில் செவ்வாய்க்கிழமை கூறியிருப்பதாவது:
 
"சாமானிய மக்களை கருத்தில் கொண்டு ரயில்வே பட்ஜெட்டை தயாரித்துள்ள அமைச்சர் சதானந்த கெளடாவுக்கு பாராட்டுகள். ரயில்களின் வேகம் அதிகரிப்பு, சிறப்பான சேவை, உயர் பாதுகாப்பு போன்ற அம்சங்களை இந்த பட்ஜெட் உள்ளடக்கியுள்ளது.
 
நாட்டின் வளர்ச்சிப் பாதைக்கான இன்ஜினாக ரயில்வே துறை உருவெடுத்துள்ளது. உறுதியான, வெளிப்படையான, நேர்மையான ரயில்வே நிர்வாகத்தின் மூலம் நாட்டை முன்னேற்றுவதுதான் மத்திய அரசின் நோக்கம் என்பதை ரயில்வே பட்ஜெட் மூலம் சதானந்த கெளடா கோடிட்டுக்காட்டியுள்ளார்' என்று மோடி கூறியுள்ளார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.! NDA சார்பில் எந்த கட்சி போட்டி..! அண்ணாமலை அறிவிப்பு..!

ரூ.78 கோடி மதிப்பீட்டில் குறுவை சாகுபடிக்கு சிறப்பு தொகுப்பு.! தமிழக அரசு அறிவிப்பு..!!

தேர்தல் முடிந்த பின்னர் சென்னை வரும் பிரதமர் மோடி.. வந்தே பாரத் ரயில் துவக்கவிழா..!

குவைத் தீ விபத்து..! கொச்சி வந்த உடல்களுக்கு அஞ்சலி..! தமிழர்களின் உடல்களை பெற்ற அமைச்சர் மஸ்தான்..!!

சிம் கார்டுகளை பயன்படுத்தாமல் இருந்தால் கூடுதல் கட்டணம்! – TRAI அதிரடி முடிவு!

Show comments