Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடியின் ஃபிட்னஸ் வீடியோவை எடுக்க இத்தனை லட்சங்களா?

Webdunia
திங்கள், 2 ஜூலை 2018 (16:41 IST)
சமீபத்தில் சில வாரங்களுக்கு முன்னர் ஃபிட்னஸ் சேலஞ்ச் வீடியோக்கல் டிவிட்டரில் டிரெண்டாகின. அதன் வகையில் இந்திய கிரிக்கெட் வீரர் கோலியின் சேலஞ்ச்சை ஏற்று மோடி ஃபிட்னெஸ் வீடியோவை வெளியிட்டார். 
 
இந்த வீடியோ வெளியாகி வைரல் ஆனது. இதனை பலரும் கேலி கிண்டல் செய்தனர். ட்ரோல் வீடியோகளும், மீம்களும் எக்கசக்கமாய் இந்த வீட்யோவை கிண்டல் செய்து வெளியானது. 
 
ஆனால், இந்த வீடியோவிற்காக எவ்வளவு செய்யப்பட்டது என்பது தற்போது வெளியாகியுள்ளது. இந்த வீடியோ ஒரே நாளில் எடுக்கப்பட்டது கிடையாது. இதற்காக மூன்று நாள் செலவு செய்யப்பட்டுள்ளது. 
 
அதன் பின்னர் இரண்டு நாட்கள் எடிட் செய்யப்பட்டுள்ளது. எடிட்டிங்கிற்காக பாலிவுட்டில் புகைப்பட கலைஞர் ஒருவர் வரவழைக்கப்பட்டு இந்த வீடியோ வேலைகள் முடிக்கப்பட்டதாம். 
 
மொத்தமா இந்த வீடியோவை எடுக்க ரூ.35 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளுக்கு ரூ.12 லட்சம் வரை செலவு செய்து எடுத்துள்ளனர். இந்த விடியோவிற்கான செலவு பணம் மொத்தம் மக்களுடையது என காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது. 
 
ஆனால், பாஜக இந்த குற்றச்சாட்டை மறுத்ததோடு இது மக்கள் பணம் அல்ல, ஸ்பான்சர் கொடுத்த பணம் என்று விளக்கம் அளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வீடு தொடங்கி வீதி வரை பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது: கனிமொழி எம்பி..

ராமதாசுக்கு வேலையில்லையா? ஸ்டாலின் அதிகார அகம்பாவத்தை காட்டுகிறது: அன்புமணி

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடப்பது எங்கே? பாலச்சந்திரன் பேட்டி..!

தமிழ்நாட்டில் வேர்க்கடலை பயிரிட குஜராத்தில் விதைகளை வாங்கும் விவசாயிகள் - என்ன காரணம்?

மோடி, அமித்ஷாவை சந்திக்கும் ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார், தேவேந்திர பட்னாவிஸ்.. யார் முதல்வர்?

அடுத்த கட்டுரையில்
Show comments