Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கட்டாய திருமணம்: 4 நாட்களில் மனைவி கழுத்தை நெறித்து கொலை செய்த கணவன்

Webdunia
புதன், 3 மே 2017 (22:20 IST)
பிடிக்காத பெண்ணை கட்டாயப்படுத்தி பெற்றோர் திருமணம் செய்து வைத்ததால் திருமணமான நான்கே நாட்களில் மனைவியை துப்பட்டாவால் கழுத்தை நெறித்து கொலை செய்த கணவன் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார்.



 


மும்பையை சேர்ந்த அசிப் சித்திக்கி என்பவருக்கும், உபியை சேர்ந்த சப்ரீன் என்ற பெண்ணுக்கும் ஏப்ரல் 6ஆம் தேதி திருமணம் நடந்தது. இந்த திருமணம் தனக்கு பிடிக்கவில்லை என்றும் அதை நிறுத்துமாறு அசிப் தனது பெற்றோர்களிடம் மன்றாடியுள்ளார். ஆனால் பெற்றோர் கட்டாயப்படுத்தி திருமணம் செய்துவைத்துவிட்டதாக தெரிகிறது.

இதனால் புதுமனைவியின் மீது பிடித்தம் இல்லாமல் இருந்த அசிப் ஒரு கட்டத்தில் வெறுப்பாகி சப்ரீனை அவரது துப்பட்டாவால் கழுத்தை நெறித்து கொலை செய்து பிணத்தை குப்பையில் தூக்கி எறிந்தார்.

ஏப்ரல் 10ஆம் தேதி இளம் பெண் ஒருவரின் சடலத்தை கண்டுபிடித்த மும்பை காவல்துறை இதுகுறித்து தீவிரமாக விசாரணை செய்தபோது அசிப் தனது மனைவியை காணவில்லை என்று புகார் கொடுத்திருப்பது தெரிந்தது. பின்னர் அவரிடம் போலீசார் தங்கள் பாணியில் விசாரணை செய்ததில் மனைவியை கொன்றுவிட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார். நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட அசிப் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜக-வுக்கு எதிரான ஆம் ஆத்மியின் போராட்டம் தொடரும்: டெல்லி முதல்வர் அதிஷி

ஈகோவால் இழந்த கூட்டணி .. தலைநகரை தவறவிட்ட ஆம் ஆத்மி..!

கெஜ்ரிவாலை தோற்கடித்தவர் தான் டெல்லி முதல்வரா? போட்டிக்கு 2 எம்.எல்.ஏக்கள்..!

ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்.. கருவில் இருந்த குழந்தை உயிரிழப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments