மாயமான இந்திய விமானம்; விபத்துக்குள்ளானதாக அதிகார பூர்வ அறிவிப்பு!!

Webdunia
வியாழன், 1 ஜூன் 2017 (12:56 IST)
காணாமல் போனதாய் தேடப்பட்டு வந்த சுகோய் 30 போர் விமானம் விபத்துக்குள்ளானதாக இந்திய விமானப்படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 


 
 
பிரான்ஸின் மிராஜ் போர் விமானங்களுக்கு பதிலாக 1997 ஆம் ஆண்டு சுகோய் ரக விமானங்கள் சேர்க்கப்பட்டது. ஆனால், இது  தொழில் நுட்பகோளாறு ஏற்பட்டு அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகிறது.
 
இந்நிலையில், கடந்த 23 ஆம் தேதி அஸ்ஸாம் தேஜ்பூர் விமானப்படை தளத்தில் இருந்து பயிற்சிக்கு புறப்பட்டது சுகோய் ரக விமானம். 
 
புறப்பட்ட அரை மணிநேரத்தில் ரேடாரின் இணைப்பை விமானம் இழந்தது. எனவே, மாயமான விமானத்தை தேடும் பணி நடைபெற்று வந்தது. 
 
தேடப்பட்டு வந்த நிலையில் விமானத்தின் பாகங்கள் அருணாசல பிரதேச மாநில மலைப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.
 
இதையடுத்து அந்த விமானம் விபத்துக்குள்ளானதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அதில் பயணம் செய்த விமானிகள் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ள ஓட்டினால் வெற்றி பெற்ற கட்சிகள் தான் SIRஐ எதிர்க்கின்றன: வானதி சீனிவாசன்

ரூ.1800 கோடி அரசு நிலத்தை ரூ.300 கோடிக்கு வாங்கிய அஜித் பவார் மகன் விவகாரம்.. அரசின் அதிரடி உத்தரவு..!

தமிழகம் வருகிறார் அமித்ஷா.. சுறுசுறுப்பாகும் தேர்தல் களம்..!

ஜனவரி வரைக்கும் வெயிட் பண்ணுங்க!.. தவெக இனிமே வேறலெவல்!.. செங்கோட்டையன் மாஸ்!...

காங்கிரஸ் எம்பிக்களுடன் ராகுல் காந்தி திடீர் ஆலோசனை.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments