Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பழிக்கு பழி - சிறுமியை பலாத்காரம் செய்யும்படி பஞ்சாயத்து தீர்ப்பு

Webdunia
வெள்ளி, 11 ஜூலை 2014 (13:32 IST)
ஜார்காண்ட் மாநிலத்தில் ஒரு பெண்ணை மானபங்கப்படுத்த முயன்ற வாலிபரை தண்டிக்க, அவரின் 10 வயது தங்கையை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தும்படி பஞ்சாயத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஜார்காண்ட்டில் உள்ள குல்குலியா தோரா கிராமத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், அதே கிராமத்தைச் சேர்ந்த பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்த முயன்றதாக கிராம பஞ்சாயத்தில் புகார் அளிக்கப்பட்டது.
 
இதையடுத்து அந்த வாலிபரைத் தண்டிக்கும் விதத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர், வாலிபரின் 10 வயது தங்கையை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தும்படி பஞ்சாயத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.
 
பழிக்கு பழி என்னும் நோக்கில் அளிக்கப்பட்ட இந்த தீர்ப்பால் 10 வயது சிறுமி பாலியல் கொடுமைக்கு ஆளானதை அடுத்து, அச்சிறுமியின் தாய் இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
 
இதையடுத்து, குற்றம் சாற்றப்பட்ட வாலிபர், சிறுமியை பலாத்காரம் செய்த நபர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல் துறையினர் பஞ்சாயத்து  உறுப்பினர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 
 

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!