Webdunia - Bharat's app for daily news and videos

Install App

17 வயது சிறுமி கர்ப்பம்: 5 பேர் 5 மாதமாக கடத்தி பலாத்காரம் செய்த அவலம்!

17 வயது சிறுமி கர்ப்பம்: 5 பேர் 5 மாதமாக கடத்தி பலாத்காரம் செய்த அவலம்!

Webdunia
ஞாயிறு, 2 ஏப்ரல் 2017 (12:25 IST)
பஞ்சாப் மாநிலத்தில் 17 வயதான இஸ்லாமிய சிறுமி ஒருவர் 5 மாதத்துக்கு முன்னர் சிலரால் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தற்போது அந்த சிறுமி கர்ப்பமாக உள்ள சம்பவம் நடந்துள்ளது.


 
 
பஞ்சாம் ஜலந்தர் பகுதியை சேர்ந்த 17 வயது இஸ்லாமிய சிறுமி குடும்ப வறுமை காரணமாக தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இவரை கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முதல் காணவில்லை. இதனால் சிறுமியின் பெற்றோர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர். ஆனால் காவல்துறை இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
 
இந்நிலையில் தற்போது 5 மாதங்களுக்கு பின்னர் கடத்தப்பட்ட சிறுமி சிலரின் உதவியுடன் தப்பித்து தனது பெற்றோர்களிடம் வந்து சேர்ந்துள்ளார். 5 மாதமாக தன்னை கடத்திய 5 பேரும் தன்னை பலாத்காரம் செய்ததாகவும், தான் தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
 
இதனையடுத்து சமூக ஆர்வலர் ஒருவரின் உதவியுடன் மீண்டும் காவல்துறை அதிகாரி ஜி.எஸ்.புல்லரிடம் புகார் அளித்தனர் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்கள். பின்னர் உடனடியாக முன்னர் நடவடிக்கை எடுக்காத காவல்துறை அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்தார் மூத்த காவல்துறை அதிகாரி ஜி.எஸ்.புல்லர்.
 
மேலும் சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த 5 பேர் மீதும் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சிறுமியை கடத்தியவர்கள் சிறுமி வேலை செய்து வந்த தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தவர்கள். இவர்கள் தற்போது தலைமறைவாக உள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவுரவ விரிவுரையாளர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்ப்பதா? அன்புமணி கண்டனம்..!

டிரம்ப் மனமாற்றத்தால் 1471 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் குஷி..!

25 கோடி ஏழைகளை பணக்காரர்களாக்கியுள்ளோம்! பாஜகவின் சாதனைகள் என்ன? - பட்டியலிட்ட பிரதமர் மோடி!

ஜனாதிபதி மாளிகையில் சி.ஆர்.பி.எப் வீராங்கனைக்கு திருமணம்.. வரலாற்றில் முதல் முறை..!

24 மணிநேரத்தில் அரசியல் சாசனப்படி முடிவெடுக்க வேண்டும்: ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்..

அடுத்த கட்டுரையில்