மக்கள் தொகை அதிகரிப்புக்கு காங்கிரஸ் கட்சி தான் காரணம்.. மத்திய அமைச்சரின் கண்டுபிடிப்பு..!

Webdunia
வெள்ளி, 10 மார்ச் 2023 (07:54 IST)
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டதாகவும் இதனால் தான் கர்நாடக மாநிலத்தில் மக்கள் தொகை அதிகரித்ததாகவும் மத்திய அமைச்சர் ஒருவர் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கர்நாடக மாநிலத்தில் இந்த ஆண்டு தேர்தல் வர இருப்பதை அடுத்து தற்போதே தேர்தல் பிரச்சாரங்களும் தொடங்கிவிட்டன என்பதும் குறிப்பாக பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் தேர்தல் களத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி பேசினார். அவர் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியின் போது போதிய அளவு மின்சாரம் வழங்கப்படவில்லை என்றும் அதனால் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டதால் தான் மக்கள் தொகை அதிகரித்தது என்றும் கூறியுள்ளார். அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
 
கர்நாடக மாநிலத்தில் வரும் மே மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து மாநிலத்தில் தேர்தல் களை தொடங்கியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் இருக்கும் சிக்கல்!.. சமாளிப்பாரா செங்கோட்டையன்!.. ஒரு பார்வை...

திருமணத்திற்கு மறுத்த ஆசிரியை வெட்டி கொலை.. சட்டம் - ஒழுங்கை காப்பாற்றுங்கள்: அன்புமணி கோரிக்கை

4 ஆண்டுகளாக பங்குச்சந்தையில் வர்த்தகம்.. ரூ.35 கோடி ஏமாந்த 72 வயது முதியவர்..!

'டிக்வா' புயல் எச்சரிக்கை: நாளை 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்'!

செங்கோட்டையனை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்: விஜய் வெளியிட்ட அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments