Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேலும் ஒரு மத்திய அமைச்சருக்கு கொரோனா: டுவிட்டரில் தகவல்

Webdunia
வியாழன், 17 செப்டம்பர் 2020 (07:36 IST)
ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட பல அமைச்சர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒரு மத்திய அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது
 
மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தனக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
 
மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி பதிவு செய்த டுவிட்டில் கடந்த சில நாட்களாக தனது உடல் சோர்வுடன் இருப்பதாக உணர்ந்ததையடுத்து, மருத்துவரை அணுகி சோதனை செய்ததாகவும், அதன்பின் கொரோனா பரிசோதனை மேற்கொண்ட போது கொரோனா தொற்று இருப்பது உறுதியானதாகவும் தெரிவித்துள்ளார். 
 
தற்போது நலமுடன் உள்ளதாகவும், தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் தன்னிடம் கடந்த சில நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுமாறும் அவர் தனது டுவிட்டில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தைலாபுரம் vs பனையூர்! போட்டிக்கு மீட்டிங் போட்ட அன்புமணி! - இறுதி கட்டத்தை எட்டும் போர்!

சென்னை அருகே சாலையில் திடீர் பிளவு.. பூகம்பம் வந்தது போல் இருந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

அஜித்குமார் கொலை வழக்கு: சிபிஐக்கு நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

அவர் பாதையில்? பாமக மேடையில் ராமதாஸ் மகள் காந்திமதி.. அன்புமணி ஆப்செண்ட்! - அடுத்தடுத்து பரபரப்பு!

ரயில் விபத்திற்கு கடலூர் கலெக்டர் தான் காரணமா? தெற்கு ரயில்வே அதிகாரி அறிக்கையால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments