காட்டுப்பாதையில் அமெரிக்காவுக்கு நுழைய முயன்ற 50 இந்தியர்கள்.. கைவிலங்கிட்டு நாடு கடத்தல்..!

Siva
திங்கள், 27 அக்டோபர் 2025 (15:27 IST)
அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைய முயன்ற ஹரியானாவை சேர்ந்த 50 இந்திய இளைஞர்கள், 14 மாத சிறைவாசத்திற்கு பிறகு கைவிலங்குகளுடன் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
 
'கழுதைப் பாதை' என அழைக்கப்படும் சட்டவிரோத வழியில் செல்ல, இந்த இளைஞர்கள் தங்கள் நிலங்களை விற்று, தரகர்களுக்கு பெருந்தொகை கொடுத்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர், தரகர்களிடம் ரூ.57 லட்சம் வரை கொடுத்ததாக கண்ணீருடன் தெரிவித்துள்ளார். மேலும், கௌதமாலா, மெக்சிகோ போன்ற எல்லைகளை கடக்க கூடுதல் கட்டணங்கள் செலுத்தப்பட்டதாக கூறியுள்ளனர்.
 
தரகர்களின் வாக்குறுதிக்கு மாறாக, அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு, 14 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டதாகவும், தற்போது நாடு கடத்தப்பட்டதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.
 
இந்தச் சம்பவம் குறித்து, சட்டவிரோத குடியேற்றம் கடும் தண்டனைக்குரிய குற்றம் என்றும், ஏமாற்றும் தரகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காட்டுப்பாதையில் அமெரிக்காவுக்கு நுழைய முயன்ற 50 இந்தியர்கள்.. கைவிலங்கிட்டு நாடு கடத்தல்..!

வரும் தேர்தலில் திமுக வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது. முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்..!

சாலையின் நடுவே சாக்கு மூட்டையில் கட்டுக்கட்டாக பணம்.. மதுரையில் பரபரப்பு..!

5 பேருந்துகள்.. 150 பேர் சென்னை வருகை.. கரூரில் பாதிக்கப்பட்டவரகளின் குடும்பத்தை சந்தித்த விஜய்..!

மழையில் நனைந்த அரிசி மூட்டைகளில் நெல் முளைத்து விட்டது! இதுதான் திமுகவின் சாதனையா? - அன்புமணி ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments