Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இடைத் தேர்தலில் மெஹபூபா முப்தி வெற்றி

இடைத் தேர்தலில் மெஹபூபா முப்தி வெற்றி

இடைத் தேர்தலில் மெஹபூபா முப்தி வெற்றி
, சனி, 25 ஜூன் 2016 (16:32 IST)
சட்டப் பேரவை இடைத் தேர்தலில் காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முப்தி வெற்றி பெற்றுள்ளார்.
 

 
காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் தொகுதியில் நடைபெற்ற சட்டப் பேரவை இடைத் தேர்தலில் அந்த மாநில முதல்வர் மெஹபூபா முப்தி வெற்றி பெற்றுள்ளார்.
 
கடந்த ஜனவரி 7 ஆம் தேதி உடல் நலக் குறைவால் 
ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் முப்தி முஹமது சயீத்  உயிரிழந்தார். இதனையடுத்து, புதிய முதல்வராக அவரது மகளும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெஹபூபா முப்தி பதவிற்றுக் கொண்டார்.
 
இந்த நிலையில் கடந்த 22-ந் தேதி அனந்த்நாக் தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், மக்கள் ஜனநாயகக் கட்சி - பாஜக கூட்டணி வேட்பாளரான  மெஹபூபா முப்தி போட்டியிட்டார்.
 
அந்த தொகுதியின் வாக்கு பதிவு முடிந்து, இன்று காலை வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. இறுதியில், 2 ஆயிரம் வாக்குகள் வித்தாயசத்தில் மெஹபூபா முப்தி வெற்றி பெற்றார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டெல்லியில் அவசரநிலையை பிரகடனம் செய்த மோடி: கேஜ்ரிவால் காட்டம்