அமைதியாக இருங்கள்.. இல்லையேல் உங்கள் வீட்டுக்கு ED வரும்.. நாடாளுமன்றத்தில் மிரட்டிய அமைச்சர்..!

Webdunia
வெள்ளி, 4 ஆகஸ்ட் 2023 (07:49 IST)
நாடாளுமன்றத்தில் அமைதியாக இருங்கள் இல்லையேல் உங்கள் வீட்டிற்கு அமலாக்கத்துறை ரெய்டு வரும் என எம்பி ஒருவரை மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி என்பவர் மிரட்டியதாக தகவல் வெளியானது. 
 
டெல்லி அவசர சட்டத்திற்கு மாற்றாக கொண்டுவரப்பட்ட சட்ட திருத்த மசோதா நேற்று மக்கள் அவையில் தாக்கல் செய்யப்பட்டது
 
இந்த மசோதா மீது விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்று அதன் பிறகு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. 
 
இந்த நிலையில் இந்த மசோதாவுக்கு  ஆம் ஆத்மி எம்பி கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கோபமடைந்த கலாச்சாரத்துறை அமைச்சர் மீனாட்சி லேகி, ‘ உங்கள் வாயை மூடிக்கொண்டு அமைதியாக உட்காருங்கள், இல்லையேல் உங்கள் வீட்டிற்கு அமலாக்கத்துறை ரெய்டு வரும் என்று எச்சரித்தார். அவரது எச்சரிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நவம்பர் 27-ல் வங்கக் கடலில் மேலும் ஒரு தாழ்வு மண்டலம்! இந்திய வானிலை ஆய்வு மையம்

சீமான்தான் நம்பர் ஒன்!.. டிஜிட்டல் சர்வே மூலம் கிடைத்த ரிசல்ட்!..

வாக்காளர் பட்டியல் SIR படிவத்தை நிரப்ப ஏஐ தொழில்நுட்பம்: புதிய முயற்சி!

40 ஆண்டு அரசியல்.. 10 முறை முதல்வர்.. நிதிஷ்குமாரின் சொத்து மதிப்பு ரூ.1.64 கோடி, 13 பசுக்கள் தானா?

உலகிலேயே கஷ்டமில்லாத பணி கவர்னர் பணி.. கனிமொழி எம்பி கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments