Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலித்துக்கள் மீது தாக்குதலுக்கு ஆர்எஸ்எஸ் தான் காரணம் - மாயாவதி குற்றச்சாட்டு

Webdunia
சனி, 6 ஆகஸ்ட் 2016 (22:44 IST)
ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் திட்டப்படியே தலித்துக்கள் குறிவைத்து தாக்கப்படுவதாக, பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார்.
 

 
குஜராத் மாநிலம் உனாவில் மாட்டுத்தோல் வைத்திருந்ததாக கூறி தலித் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பாதிக்கப்பட்டவர்களை பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
 
அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாயாவதி, “பசுக்களை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் முஸ்லிம்களையும், தலித்துக்களையும் தாக்குவது நீடித்து வருகிறது; ஆர்எஸ்எஸ் வகுத்துக் கொடுத்த திட்டத்தின் படிதான், பாஜக மற்றும் சிவசேனா கட்சியினர் இந்த தாக்குதல் சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனர்” என்று குற்றம் சாட்டினார்.
 
மேலும், “முதலில் முஸ்லிம்களை குறிவைத்தார்கள்; இப்போது தலித்துக்களை குறிவைத்துள்ளார்கள்; எப்போது பாஜக ஆட்சிக்கு வந்ததோ அப்போது இருந்தே நாடு முழுவதும் பின்தங்கிய மக்கள் குறிவைத்து தாக்கப்படுகிறார்கள்; குறிப்பாக குஜராத் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் இதுபோன்ற கொடுமைகள் அதிகமாக நடக்கின்றன” என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈஷா யோகா மையத்தில் நடைபெறவுள்ள மகா சிவராத்திரிக்கு தடை இல்லை: நீதிமன்றம் உத்தரவு..!

10ஆம் வகுப்பு மாணவியின் கழுத்தை அறுத்த 12ஆம் வகுப்பு மாணவன்.. கரூர் அருகே பயங்கரம்..!

ஆத்துல காந்தம் போட்டா 2 ஆயிரம்.. பைக் சேவைக்கு 5 ஆயிரம்! - கும்பமேளாவில் கல்லா கட்டும் மக்கள்!

சட்டவிரோத குடியேறிகளை உடனே வெளியேற்றுவேன்: அதிபராகவுள்ள ஃப்ரெட்ரி மெர்ஸ் பேட்டி..!

தவெக ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறாரா பிரசாந்த் கிஷோர்?

அடுத்த கட்டுரையில்
Show comments