Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்களவை தேர்தலில் தனித்து போட்டி: பகுஜன் சமாஜ் கட்சி மாயாவதி அறிவிப்பு..!

Siva
திங்கள், 15 ஜனவரி 2024 (15:06 IST)
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள முன்னணி அரசியல் கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, இந்தியா கூட்டணி மற்றும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றும் வரும் மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிட போவதாகவும் அறிவித்துள்ளார்.  
 
பிற்படுத்தப்பட்ட மக்கள் மற்றும் இஸ்லாமியர் ஆதரவுடன் கடந்த 2007 ஆம் ஆண்டு போட்டியிட்டு தேர்தலில் வெற்றி பெற்றோம் என்றும் அதனால் வரும் மக்களவைத் தேர்தலிலும் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளோம் என்றும் எங்களைப் பொறுத்தவரை கூட்டணியால் நாங்கள் இழந்தது தான் அதிகம் எங்களுக்கு கூட்டணியால் எந்த பலனும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். 
 
வேண்டுமானால் தேர்தலுக்கு பின்னர் கூட்டணி வைத்துக் கொள்ளலாம் என்றும் தேர்தலுக்கு பின்னர் பகுஜன் சமாஜ் கட்சி, மற்ற கட்சிகளுக்கு ஆதரவு அளிப்பது குறித்து ஆலோசனை செய்யும் என்றும் மாயாவதி தெரிவித்துள்ளார்.
 
 பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தனது மருமகன் ஆகாஷ் ஆனந்த்தை அடுத்த அரசியல் வாரிசாக அறிவித்துள்ளார் என்பது தெரிந்ததே..
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பல்வேறு யூனியன் பிரதேசங்களில் இருந்து 500 பள்ளிகள் பங்கு கொண்ட மாபெரும் இறகு பந்து போட்டி

அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் போதைப்பொருள் விநியோகம்: தமிழக அரசின் மீது ஆளுநர் ரவி குற்றச்சாட்டு

கேரளா கல்லூரியில் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை நாள் அனுசரிப்பு.. மாணவர்களிடையே கடும் மோதல்..!

ஜம்மு - காஷ்மீரில் மேக வெடிப்பு: 33 பேர் உயிரிழப்பு, 200-க்கும் மேற்பட்டோர் மாயம்

நாளை ஆளுனரின் தேநீர் விருந்து.. புறக்கணிக்க முதல்வர் ஸ்டாலின் முடிவு

அடுத்த கட்டுரையில்
Show comments