Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.5 லட்சம் வரதட்சணை கொடுத்த மணமகள் வீட்டார். ஒரே ஒரு ரூபாய் மட்டும் எடுத்து கொண்ட மணமகன்..!

Siva
செவ்வாய், 18 பிப்ரவரி 2025 (11:21 IST)
ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த ஒரு திருமணத்தின் போது, மணமகனுக்கு வரதட்சணையாக 5 லட்சம் அளிக்கப்பட்டன. அதில் ஒரே ஒரு ரூபாய் மட்டும் எடுத்துக் கொண்டு, மீதமான பணத்தை மணமகள் வீட்டாரிடம் மணமகன் திருப்பி கொடுத்த சம்பவம் பெரும் நிகழ்ச்சியை ஏற்படுத்தியது.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பரம்வீர் என்பவர் நிகிதா பாடி என்பவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி இந்த திருமணம் நடந்த நிலையில், மணமகள் வீட்டார் சார்பில் ஐந்து லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் ரொக்கமாக காட்டில் வைத்து வரதட்சணை கொடுக்கப்பட்டது. ஆனால், அந்த வரதட்சணை பணத்தை விரும்பாத மணமகன், அதில் இருந்து ஒரே ஒரு ரூபாய் மட்டும்  எடுத்துக் கொண்டு, மீதி பணத்தை மணமகள் வீட்டாரிடம் திருப்பி கொடுத்து விட்டார்.

"வரதட்சணை பணத்தை நீங்கள் கொடுக்க வந்த போது, இந்த சமூகத்தில் வரதட்சணை இருப்பதை எண்ணி வருத்தம் அடைந்தேன். இருப்பிடம் நீங்கள் அன்பாக கொடுக்க முன் வந்ததை என்னால் நிராகரிக்க முடியவில்லை. அதனால் நான் அந்த பணத்தில் இருந்து ஒரே ஒரு ரூபாய் மட்டும் எடுத்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

அவருடைய இந்த பதிலை கேட்டு, மணமகள் விட்டார். நெகிழ்ச்சி அடைந்தனர். திருமணத்தின் போது, வரதட்சணை வாங்கக்கூடாது என்று இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடந்த இந்த திருமணம், குறித்த செய்தி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி மாணவிகளுக்கு தொடரும் பாலியல் தொல்லை! - நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் கைது!

இன்று மீண்டும் தங்கம் விலை உயர்வு.. ஒரு கிராம் ரூ.8000ஐ நெருங்கியது..!

வேகமாக பரவி வரும் ஜிபிஎஸ் நோய்.. 2 கிராமங்களுக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை..!

எலான் மஸ்கிற்கு கூடுதல் அதிகாரம்: டிரம்பை கண்டித்து அமெரிக்காவில் திடீர் போராட்டம்..!

பனியில் சறுக்கி தலைக்குப்புற கவிழ்ந்த விமானம்! பயணிகள் நிலை என்ன? - கனடாவில் அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments