Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டி.ஆர்.டி.ஓ. நிறுவனத்தில் முதல் பெண் பொது இயக்குநராக மஞ்சுளா நியமனம்

டி.ஆர்.டி.ஓ. நிறுவனத்தில் முதல் பெண் பொது இயக்குநராக மஞ்சுளா நியமனம்
, சனி, 12 செப்டம்பர் 2015 (01:09 IST)
ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தின் முதல் பெண் பொது இயக்குநராக ஜே.மஞ்சுளா நியமிக்கப்பட்டுள்ளார்.
 
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஜே.மஞ்சுளா, ஹைதராபாத்தில் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் படிப்பை படித்தார்.
 

 
இதனையடுத்து, 1987ஆம் ஆண்டு டி.ஆர்.டி.ஓ. நிறுவனத்தில் இளநிலை பொறியாளராக பணியில் சேர்ந்தார். அதன் பிறகு படிப்படியாக பதவி உயர்வு பெற்றார். இந்த நிலையில் டி.ஆர்.டி.ஓ. நிறுவனத்தின் பொது இயக்குநராக மஞ்சுளா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிறுவனத்தில், பெண் ஒருவர் பொது இயக்குநராக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.
 
கடந்த 2011ஆம் ஆண்டு, மஞ்சுளா சிறப்பாக பணியாற்றியதற்காக டி.ஆர்.டி.ஓ. விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கது. 
 

Share this Story:

Follow Webdunia tamil