சிபிஐ கைதை எதிர்த்து மணீஷ் சிசோடியா உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல்!

Webdunia
செவ்வாய், 28 பிப்ரவரி 2023 (15:27 IST)
மதுபான ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி துணை முதல்வர் மணீஸ் சிசோடியாவை சிபிஐ அதிகாரிகள் கைது செய்த நிலையில் இன்று மாலை விசாரணை நடத்தப்பட உள்ளது.

டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா நேற்று சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரான நிலையில் அவரிடம் சிபிஐ அதிகாரிகள் சுமார் 8 மணி நேரம் விசாரணை செய்தனர்.

இதனை அடுத்து விசாரணையின் முடிவில் அவர் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்த வழக்குத் தொடர்பாகச் டெல்லிஅமைச்சர்கள், முதல்வரின் அலுவலர் உள்ளிட்டோரிடம் சில மாதங்களாக விசாரணை செய்து வரும் நிலையில் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா சம்மன் அனுப்பப்பட்டது.

இந்த சம்மனை ஏற்று மணிஷ் சிசோடியா நேற்று சிபி அலுவலகத்தில் ஆஜர் ஆன நிலையில் அவரிடம் சுமார் 8 மணி நேரம் விசாரணை செய்யப்பட்டது.

விசாரணையில் முடிவில் அவர் விசாரணைக்கு சரியாக ஒத்துழைக்காததால் காவலில் எடுத்து விசாரணை செய்ய சிபிஐ முடிவெடுத்து அவரைக் கைது செய்தனர்.

புதிய மதுபான கொள்கை முறைகேடு புகாரின் மணீஸ் சிசோடியாவை கைது செய்த சிபிஐ அதிகாரிகள் அவரை  நேற்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

மணீஸ் சிசோடியாவை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அனுமதி கோரினர்.
இந்த நிலையில் தன்னை கைது செய்ததை எதிர்த்து மணீஷ் சிசோடியா  இன்று சுப்ரீம் கோர்டில் இன்று மனுதாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுவை  அரசர வழக்காக ஏற்றுக்கொண்டு சுப்ரீம் கோர்ட்  இன்று மாலை விசாரணை நடத்த உள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை 5 ஆம் தேதி வெளியிடப்பட்ட  புதிய மதுபான கொள்கை விவகாரத்தில், டெல்லி துணை நிலை கவர்னர் விகே.சக்சேனா சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா சீட்டுக்காக அதிமுக கூட்டணியா?!.. பிரேமலதா விளக்கம்!...

பாஜகவால் என்னை தோற்கடிக்க முடியாது.. சவால் விடுத்த மம்தா பானர்ஜி..!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் செம்மொழி பூங்கா திறப்பு விழாவா? அண்ணாமலை கண்டனம்..!

சீன பாஸ்போர்ட் கேட்டு அருணாச்சல பிரதேச பெண்ணை துன்புறுத்தவில்லை: சீனா மறுப்பு..!

என்னை வங்காளத்தில் குறிவைத்தால் மொத்த தேசத்தையும் குலுங்க வைப்பேன்: மம்தா பானர்ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments