Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடைபாதையில் தூக்கு மாட்டி தற்கொலை: பட்டப்பகலில் நடந்த சோகம்!

நடைபாதையில் தூக்கு மாட்டி தற்கொலை: பட்டப்பகலில் நடந்த சோகம்!

Webdunia
வியாழன், 1 செப்டம்பர் 2016 (09:17 IST)
மும்பையில் பட்டப்பகலில் நடைபாதை ஒன்றில் அதன் அருகில் உள்ள மரத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


 
 
மும்பையில் ஏர் இந்தியா பில்டிங் உள்ள அந்த பரபரப்பான சாலையில் எப்பொழுதும் மக்கள் நடமாட்டம் அதிகமாகவே இருக்கும். பல்லாயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்யும் அந்த சாலையின் எதிரே உள்ள நடைபாதையில் ஒரு மரம் உள்ளது. அந்த மரத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார்.
 
ஒருவர் நடைபாதையில் தூக்கில் தொங்கினாலும் அந்த பகுதியை கடந்து செல்லும் எந்த நபரும் அதை கண்டுகொள்ளாமல் செல்கின்றனர் என ஒரு நபர் காவல்துறைக்கு நேற்று மதியம் தகவல் அளித்துள்ளார்.
 
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், தூக்கில் தொங்கிய உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்து கொண்டவர் சாலையோரம் வசிக்கும் நபராக இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். அந்த நபர் யார் என்ற விபரம் இன்னமும் தெரியவில்லை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சனாதனக் கும்பலை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்! - திருமாவளவன்!

மக்களின் வரிப்பணம் முட்டாள்தனமாக செலவழிப்பு.. தொண்டு நிறுவனத்தை மூடிய எலான் மஸ்க்..

போலீசை விட திருடன் மேல்.. செல்போன் தொலைத்த இளம் பெண்ணின் பதிவு..!

அண்ணா பல்கலை. உதவி பேராசிரியர் பணி: டிஆர்பி மூலம் போட்டித் தேர்வு நடத்த முடிவு..!

இந்திய விமானப்படையின் விமானம் விபத்து.. வயல்வெளியில் விழுந்து சிதறியதால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments