Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொலை செய்து சடலத்துடன் செல்ஃபி எடுத்த கொடூரன் !

Webdunia
திங்கள், 10 பிப்ரவரி 2020 (08:01 IST)
அலி

கேரளாவில் வசித்து வரும அசாமைச் சேர்ந்த இரு நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக நடந்துள்ள கொலை பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த நண்பர்களான அலி மற்றும் ஜலாலுதீன் இருவரும் சொந்த ஊரை விட்டு வந்து கேரளாவின் கொல்லம் பகுதியில் கூலி வேலை செய்து வருகின்றனர். ஒரே ஊர்க்காரர்கள் என்றாலும் இருவரும் ஒற்றுமையாக இல்லாமல் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டு இருந்ததாக சொல்லப்படுகிறது. இருவருக்கும் செல்போன் சம்மந்தமாக அடிக்கடி சண்டை வந்துள்ளது.

இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன் இதுபோல ஒரு பிரச்சனைக் காரணமாக இருவருக்கும் இடையே சண்டை வந்துள்ளது. ஒரு கட்டத்தில் கோபத்தில் அலி, நண்பன் என்றும் பாராமல் ஜலாலுதீனைக் கத்தியால் வெட்டிக் கொலை செய்துள்ளார்.

பின்னர் ரத்த வெள்ளத்தில் கிடந்த ஜலாலின் உடலோடு  நின்று செல்பி மற்றும் வீடியோக்களை எடுத்துள்ளார். அத்தோடு நில்லாமல் அதை  சமூக வலைதளத்தில் பதிவேற்றியுள்ளார். இந்த வீடியோ வேகமாகப் பரவ போலிஸார் அலியைக் கைது செய்ய சென்றுள்ளனர். போலிஸிடம் மாட்டிக்கொள்ளாமல் இருப்பதற்காக அலித்  தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளார். ஆனால் அவரைக் காப்பாற்றிய போலிஸார் மருத்துவக் கல்லூரி அனுமதித்துள்ளனர். மருத்துவமனையில் இருக்கும் அலி இப்போது ஆபத்தானக் கட்டத்தைத் தாண்டிவிட்டதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments