மேற்குவங்கத்தில் நாங்கள் தனியாகவே பாஜகவை வீழ்த்துவோம்.. மம்தா அறிவிப்பால் இந்தியா கூட்டணி அதிர்ச்சி..!

Webdunia
வெள்ளி, 29 டிசம்பர் 2023 (17:35 IST)
மேற்குவங்க மாநிலத்தில் தனியாகவே எங்களால் பாஜகவை வீழ்த்த முடியும் என்று மம்தா பானர்ஜி  தெரிவித்திருப்பது இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
மேற்குவங்க மாநிலத்தை பொருத்தவரை எங்களால் பாஜகவை தனியாக வீழ்த்த முடியும். ஆனால் அதே நேரத்தில் இந்தியா முழுவதும் இந்தியா கூட்டணி பாஜகவை வீழ்த்த பாடுபடும் என்று தெரிவித்துள்ளார். 
 
 இதிலிருந்து அவர் மேற்குவங்க மாநிலத்தில் இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் உட்பட எந்த கட்சிக்கும் தொகுதிகள் தர முடியாது என்பதை மறைமுகமாக கூறியுள்ளதாக தெரிகிறது. இதனால் இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் உள்பட மற்ற கட்சி தலைவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.  
 
தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் இந்தியா கூட்டணியின் தொகுதி பங்கீட்டில் பெரும் சிக்கல் ஏற்படும் என்று தெரிகிறது. மம்தா பானர்ஜியை பின்பற்றி அகிலேஷ் யாதவ், நிதீஷ் குமார், ஸ்டாலின் உள்பட ஒரு சில தலைவர்கள் கூறினால் இந்தியா கூட்டணி சிதறிவிடும் என்றும் கூறப்பட்டு வருகிறது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெரினா கடற்கரைக்குச் செல்லத் தடை நீட்டிப்பு: மோசமான வானிலை காரணமாக நடவடிக்கை!

புயலால் இலங்கையில் சிக்கி தவித்த இந்தியர்கள்.. அதிரடியாக மீட்ட இந்திய விமானப்படை..!

சிலிண்டர் விலை 10 ரூபாய்க்கும் மேல் குறைவு.. வழக்கம்போல் வீட்டு சிலிண்டர் விலையில் மாற்றமில்லை..!

வாரத்தின் முதல் நாளே பங்குச்சந்தை உயர்வு.. சென்செக்ஸ் 86000ஐ தாண்டி உச்சம்..!

ஒரு லட்சத்தை நெருங்கிவிட்டது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.720 அதிகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments