Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேற்கு வங்கத்தில் புதிய மோட்டார் வாகன சட்டம் அனுமதிக்கப்படாது – மம்தா பானர்ஜி உறுதி !

Webdunia
வியாழன், 12 செப்டம்பர் 2019 (08:41 IST)
புதிதாக மத்திய அரசு அமலபடுத்தியுள்ள புதிய வாகன சட்டம் மேற்கு வங்கத்தில் அமல் ஆகாது என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

வாகன விதிமீறல்களை ஒழுங்குக்கு கொண்டு வர மத்திய அரசு கடந்த செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி புதிய மோட்டார் வாகன சட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் விதிகளை மீறுபவர்கள் மேல் பழைய  அபராதத்தை விட 10 மடங்கு அதிகமாக அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

சென்ற வாரம் லாரி உரிமையாளர் ஒருவர் விதிமுறைகளை மீறி அளவுக்கதிகமாக பொருட்களை ஏற்றி வந்ததால் 70,000 ரூபாய் அபராதம் செலுத்தியதும் லுங்கி அணிந்து ஆட்டோ ஓட்டியவருக்கு 2000 ரூ அபராதம் விதித்ததும் பரபரப்பாக பேசப்பட்டது. இதையடுத்து நேற்று ஒரு லாரி உரிமையாளர் 1,41,000 ரூபாய் அபராதம் செலுத்தியது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இதனால் இந்த சட்டத்துக்கு மக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு நிலவி வருகிறது. இதனால் ஏழை எளிய மக்கள் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர்.

இதனையடுத்து மேற்கு வங்கத்தில் இந்த சட்டம் அமலுக்கு வராது என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ‘பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும்போது மனிதாபிமான அடிப்படையில் காண வேண்டும். இது மக்கள் மீது அதிக சுமையை திணிப்பதாகும். மேற்கு வங்கத்தில்  ஏற்கெனவே அமலில் உள்ள ‘பாதுகாப்பான பயணம் பாதுகாப்பான வாழ்க்கை’ என்ற விழிப்புணர்வு பிரச்சாரம் இன்னும் அதிகமாக மேற்கொள்ளப்படும்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய ரூபாயின் மதிப்பு இன்று ஒரே நாளில் 26 காசுகள் உயர்வு.. முழு விவரங்கள்..!

ராமேசுவரம் மீனவர்கள் கைது விவகாரம்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பிறந்தநாள்: தவெக தலைவர் விஜய் வாழ்த்து..!

இன்று 4 நகரில் 100 டிகிரி வெயில்.. இன்று இரவு 6 மாவட்டங்களில் மழை: வானிலை அறிக்கை..!

ஸ்டாலின் மாடல் ஆட்சியில் சட்டம் ஒழுங்கின் அவல நிலை.. ஓய்வு பெற்ற எஸ்.ஐ கொலை குறித்து ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments