Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இப்பவே விரல்ல மை வச்சுட்டா நவ.19 இடைத்தேர்தலில் பிரச்சனை வராதா?

இப்பவே விரல்ல மை வச்சுட்டா நவ.19 இடைத்தேர்தலில் பிரச்சனை வராதா?

Webdunia
செவ்வாய், 15 நவம்பர் 2016 (15:35 IST)
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்ததில் இருந்தே பல்வேறு பிரச்சனைகளை பொதுமக்கள் சந்தித்து வருகின்றனர். பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றி புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகளை பெற வங்கிகளில் காத்து கிடக்கின்றனர்.


 
 
முதியவர்கள், பெண்கள் என சாமானிய மக்கள் வெகு நேரமாக நீண்ட வரிசையில் நின்று பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகுகின்றனர். ஒரே நபர்கள் பலமுறை பணம் பெற வங்கிகளுக்கு வருவதால் இந்த பிரச்சனை வருவதால், இனி பணம் எடுக்க வங்கிக்கு வரும் நபர்களுக்கு கையில் மை வைக்கப்படும் என மத்திய நிதித்துறை செயலாளர் சக்தி காந்த தாஸ் கூறியுள்ளார்.
 
இதனால் பொதுமக்கள் மேலும் சீற்றத்தில் உள்ளனர். இந்த மை விவகாரத்திலும் தற்போது ஒரு சிக்கல் வந்துள்ளது. இன்னும் சில தினங்களில் நவம்பர் 19-ஆம் இடைத்தேர்தல்கள் நடைபெற உள்ளது. தற்போதே விரலில் மை வைத்தால் இது இடைத்தேர்தலின் போது வாக்காளர்களுக்கு சிக்கலை உருவாக்காதா என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வியெழுப்பியுள்ளார்.
 
மேலும் மத்திய அரசின் இந்த மை வைக்கும் நடவடிக்கைக்கு தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை என்ன என கேட்டுள்ளார். மேலும் பொதுமக்களின் விரலில் மை வைக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு இல்லை எனவும் இது தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்ற கருத்தும் உலா வருகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிப்பன் மாளிகையில் பேச்சுவார்த்தை: தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்குத் தீர்வு கிடைக்குமா?

சுதந்திர தினத்தன்று இறைச்சி விற்பனைக்கு தடை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

14 வயது சகோதரிக்கு ராக்கி கட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர்: அதிர்ச்சி சம்பவம்!

இன்றிரவு சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மழை.. வானிலை எச்சரிக்கை..!

மனைவி மீது சத்தியம் செய்யுங்கள்.. கேள்வி கேட்ட எம்.எல்.ஏவுக்கு சவால் விடுத்த அமைச்சர்.. பின்வாங்கிய எம்.எல்.ஏ..!

அடுத்த கட்டுரையில்
Show comments