இந்தியா கூட்டணிக்கு தலைவர் ஆகிறாரா மம்தா பானர்ஜி.. பேட்டியில் பரபரப்பு தகவல்..!

Mahendran
சனி, 7 டிசம்பர் 2024 (10:56 IST)
இந்தியா கூட்டணியை வழிநடத்த தயாராக இருப்பதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சமீபத்தில் அளித்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"நான்தான் இந்தியா கூட்டணியை உருவாக்கினேன். முன்னணியில் இருப்பவர்களால் கூட்டணியை சிறப்பாக வழிநடத்த முடியவில்லை. எனவே, இந்தியா கூட்டணியை வழிநடத்த நான் தயாராக இருக்கிறேன். அதே வேளையில், இந்தியா கூட்டணியின் தலைவராகவும் இரட்டை பொறுப்பை என்னால் நிர்வகிக்க முடியும்" என்று பானர்ஜி கூறியுள்ளார்.

சமீபத்தில் மேற்குவங்க மாநில செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "எனக்கு இந்தியா கூட்டணியை வழிநடத்தும் வாய்ப்பு கிடைத்தால், சுமூகமான செயல்பாட்டை உறுதி செய்வேன். மேற்குவங்க மாநிலத்தை விட்டு வெளியே வர விரும்பவில்லை. ஆனால், என்னால் இங்கிருந்தே இந்தியா கூட்டணியை வழிநடத்த முடியும்" என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தியா கூட்டணியின் தலைவராக தற்போது மல்லிகார்ஜூன கார்கே இருக்கும் நிலையில், அவருக்கு பதிலாக மம்தா பானர்ஜி அந்த கூட்டணியை தலைமை ஏற்று வழிநடத்துவாரா என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய விஷயமாக உள்ளது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜக தலைவர் கலந்து கொண்ட திருமண விழா.. திடீரென மேடை சரிந்ததால் மணமக்கள் அதிர்ச்சி..!

சிறுமியை வைத்து சர்ச்சைக்குரிய வசனங்களை பேச வைத்த யூடியூபர் கைது.. என் மகள் தான் என விளக்கம்..!

கிரீன் கார்டுக்கான நேர்காணலுக்கு சென்றவர்களை கைது செய்த அமெரிக்க போலீஸ்.. இந்தியர்கள் அதிர்ச்சி..!

மணிக்கு 10 கிமீ வேகத்தில் நகரும் டிட்வா புயல்! சென்னையை நெருங்குகிறதா?

விஜய் இப்படி இயங்க வேண்டும் என்பது எனது ஆசை: திருமாவளவன் கூறிய ஆலோசனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments