Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மம்தா பானர்ஜிக்கு நெருக்கமான காவல்துறை ஆணையர் நீக்கம்: தேர்தல் ஆணையம் அதிரடி

Webdunia
புதன், 13 ஏப்ரல் 2016 (09:32 IST)
மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு நெருக்கமான கொல்கத்தா காவல்துறை ஆணையரை நீக்கி தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.


 
மேற்கு வங்க மாநிலத்தில் 6 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், கொல்கத்தா நகர காவல்துறை ஆணையராக ராஜீவ்குமார் பதவி வகித்து வந்தார்.
 
இவர் மம்தா பானர்ஜிக்கு நெருக்கமானவர் என்றும், எதிர்க்கட்சி தலைவர்கள், உயர் அதிகாரிகள், பத்திரிகையாளர்களை உளவு பார்ப்பவர் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.
 
இது குறித்து தேர்தல் ஆணையரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், கொல்கத்தா காவல்துறை ஆணையர் ராஜீவ் குமாரை நீக்கி தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டது.
 
இதைத் தொடர்ந்து, புதிய காவல்துறை ஆணையராக சிஐடி பிரிவு கூடுதல் காவல்துறை டிஜிபி சவுமென் மித்ரா நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நெல்லை ஜெயக்குமார் மரணம்.. கூடுதலாக 10 தனிப்படைகள்.. புதிய அதிகாரிகள் சேர்ப்பு..!

தொடர் சரிவில் பங்குச்சந்தை.. ஜூன் 4க்கு பின்னராவது உயருமா?

தங்கம் விலை இன்று திடீர் உயர்வு.. ஒரே நாளில் ரூ.560 உயர்ந்ததால் அதிர்ச்சி..!

மே 18-20.. 3 நாட்களுக்கு மிக கனமழை: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை.. விஜய் பிறப்பித்த முக்கிய உத்தரவு..!

Show comments