உதயநிதி மகாராஷ்டிரா வந்தால் சொந்த காலால் திரும்பி செல்ல முடியாது: பாஜக எம்எல்ஏ மிரட்டல்

Webdunia
வியாழன், 14 செப்டம்பர் 2023 (16:13 IST)
உதயநிதி மகாராஷ்டிரா மாநிலத்திற்கு வந்தால் அவர் திரும்பி சொந்த காலால் செல்ல முடியாது என மகாராஷ்டிரா மாநில பாஜக எம்எல்ஏ மிரட்டல் விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
மகாராஷ்டிரா மாநில பாஜக எம்எல்ஏ  நிதேஷ் ரானே. என்பவர் ஆங்கில தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்  உதயநிதி நீதிமன்றத்துக்கு வரும் வரை நாங்கள் காத்திருக்கின்றோம் என்றும் அவர் இங்கு வந்தால் அவரை எங்கள் பாணியில் வரவேற்க தயாராக இருக்கிறோம் என்றும் இந்து தர்மத்துக்கு எதிராக யார் பேசினாலும் அவர்கள் சொந்த காலில் திரும்பிச் செல்ல முடியாது என்பது உறுதி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  
 
முகமது நபிகள் குறித்து கடுமையான கருத்தை தெரிவித்த நுபுஷாவுக்கு நடந்தது என்ன? அவருக்கு கொலை மிரட்டல்கள் எல்லாம் நடந்தன, அவரது தலையை வெட்ட வேண்டும் என்று பேசினர். ஆனால் இந்துக்களாக நாங்கள் ஏன் சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசும்போது சகித்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை மீண்டும் மக்களை சந்திக்கும் விஜய்.. 2000 பேருக்கு மட்டும் அனுமதி..!

திருமணத்திற்கு முன் விபத்து.. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மணமகளுக்கு தாலி கட்டிய மணமகன்..

திமுக கிளை செயலாளர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை: சேலம் அருகே பரபரப்பு

ரூ.1 லட்சத்தை நெருங்குகிறது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.1,360 உயர்வு..!

காஞ்சிபுரத்தில் மீட்டிங்!.. நிர்வாகிகளை சந்திக்க வரும் விஜய்!.. பரபர அப்டேட்!...

அடுத்த கட்டுரையில்
Show comments