Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மகாராஷ்டிராவில் அமல் படுத்தப் பட்டது குடியரசுத் தலைவர் ஆட்சி

மகாராஷ்டிராவில் அமல் படுத்தப் பட்டது குடியரசுத் தலைவர் ஆட்சி
, ஞாயிறு, 28 செப்டம்பர் 2014 (15:06 IST)
மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் பதவியை பிரித்விராஜ் சவாண் ராஜினாமா செய்த நிலையில் அம்மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் படுத்தப்படுத்தப் பட்டுள்ளது.
 
மகாராஷ்டிரா மாநில சட்டசபைத் தேர்தல் அக்டோபர் 15 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில், தொகுதி பங்கீடு குறித்து பல்வேறு கட்டமாக ஆளும் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.
 
இரு கட்சிகளுக்கும் சரிசமமாக 144 தொகுதியை ஒதுக்க வேண்டும் என்ற முடிவில் தேசியவாத காங்கிரஸ் உறுதியாக இருந்தது. இதில் உடன்பாடு ஏற்படாமல் இருந்தது.
 
இந்நிலையில், சிவசேனா கட்சியுடனான 25 ஆண்டுகால கூட்டணியை, முறித்துக்கொள்வதாக பாஜக அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில், காங்கிரஸ் உடனான 15 ஆண்டுகால கூட்டணியை முறித்துக் கொள்வதாக தேசியவாத காங்கிரஸ் அறிவித்தது. மேலும் அரசுக்கு அளித்து வந்த ஆதரவையும் வாபஸ் பெற்றது.
 
இதைத் தொடர்ந்து, சட்டசபையில் காங்கிரசின் பலம் 82 ஆக குறைந்தது. ஆட்சியமைக்க குறைந்தது 145 எம்.எல்.ஏக்கள் ஆதரவு வேண்டும் என்ற நிலையில், போதுமான பெரும்பான்மை இல்லாததால், முதலமைச்சர் பதவியை சவாண் ராஜினாமா செய்தார்.
 
இதத் தொடர்ந்து அம்மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
 
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil