Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மகாராஷ்டிராவில் 18 புதிய அமைச்சர்கள் – பட்டியல் இதோ!

மகாராஷ்டிராவில் 18 புதிய அமைச்சர்கள் – பட்டியல் இதோ!
, செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (12:05 IST)
மும்பையில் இன்று நடைபெற்ற பிரமாண்ட விழாவில் மராட்டிய மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்பட்ட 18 பேர் மந்திரிகளாக பதவியேற்றுள்ளனர்.


ஏக்னாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனா பிரிவினர் கிளர்ச்சியால் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசாங்கத்தை வீழ்த்தி பாஜகவுடன் கைக்கோர்த்து ஆட்சி அமைத்தது. ஜூன் மாதம் ஷிண்டே முதலமைச்சராகவும், பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் துணைத் தலைவராகவும் பதவியேற்றதைத் தொடர்ந்து அமைச்சரவையை விரிவாக்குவதில் தாமதம் ஏற்பட்டதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்தனர்.

இந்நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த அமைச்சரவை விரிவாக்கம் 40 நாட்களுக்குப் பிறகு இன்று நடைபெற்றது. முதல்கட்ட விரிவாக்கத்தின்படி, மொத்தம் 18 பேர் மந்திரிகளாக இன்று பதவியேற்று கொள்கின்றனர். பாஜகவை சேர்ந்த 9 பேர், சிவசேனாவை சேர்ந்த 9 பேர் மந்திரிகளாக பதவியேற்கின்றனர்.

பாஜக எம்எல்ஏக்களில் சந்திரகாந்த் பாட்டீல், சுதிர் முங்கண்டிவார், கிரிஷ் மகாஜன், சுரேஷ் காடே, ராதாகிருஷ்ண விகே பாட்டீல், ரவீந்திர சாவான், மங்கள் பிரபாத் லோதா, விஜய்குமார் காவிட் மற்றும் அதுல் சேவ் இடம்பெற்றுள்ளனர்.

சிவ சேனா கட்சியில் இருந்து தாதா பூசே, சந்தீபன் பும்ரே, உதய் சமந்த், தானாஜி சாவந்த், அப்துல் சத்தார், தீபக் கேசர்கர், குலாப்ராவ் பாட்டீல், சஞ்சய் ரத்தோட் மற்றும் ஷம்புராஜே தேசாய் ஆகியோர் பதவியேற்பார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆயிரம் நகரங்களில் 5ஜி நெட்வொர்க்; ஆஃபரும் உண்டு! – ரெடியாகும் ஜியோ!