Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐந்து பெண்கள் உட்பட 6 பேரை கொலை செய்த மருத்துவர்!

Webdunia
புதன், 17 ஆகஸ்ட் 2016 (16:06 IST)
மஹாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் ஆறு பேரை கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

 
அங்கன்வாடி மையத்தில் பணிபுரியும் தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த பெண் மங்கள் ஜிதே (49). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்  மாயமானதை அடுத்து தீவிரமாக தேடிவந்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
 
இந்நிலையில். மருத்துவர் சந்தோஷ் பால் மற்றும் அவரது உதவியாளர் ஜோதி மந்த்ரா ஆகியோர் மங்கள் ஜிதேவை கடத்தி, உயிருக்கு ஆபத்தான மருந்தை அதிக அளவு அவருக்குக் கொடுத்து கொலை செய்து, உடலை பண்ணை வீட்டில் புதைத்து உள்ளது தெரியவந்தது.
 
இதையடுத்து மருத்துவர் பாலை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது பால், ஐந்து பெண்கள் மற்றும் ஒரு ஆணையும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புகொலை செய்தது தெரியவந்தது.
 
கொல்லப்பட்ட ஐந்து பெண்களின் உடல்களை வீடு ஒன்றிலிருந்து காவல்துறையினர் தோண்டி எடுத்தனர். இதுதவிர, மருத்துவர் பால் ஆண் ஒருவரை கொன்று அணைப் பகுதியில் வீசியதும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் மஹாராஷ்டிரா மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீங்கள் எவ்வளவு முட்டாளாக இருக்கிறீர்கள் திரு.மு.க.ஸ்டாலின்? ரூபாய் இலச்சினை மாற்றத்தால் அண்ணாமலை ஆவேசம்!

வாடிக்கையாளர் சேவை மையத்தில் இந்தியில் மட்டுமே பதில்.. டாக்டர் ராமதாஸ் கண்டனம்..!

சவுதி அரேபியா அரசு மருத்துவமனைகளில் நர்ஸ் பணி.. விண்ணப்பிப்பது எப்படி?

ரூபாய்க்கு புதிய இலச்சினை..! எல்லார்க்கும் எல்லாம்! - தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை Highlights!

இந்தியா வந்த இங்கிலாந்து பெண் வன்கொடுமை! இன்ஸ்டா நண்பன் கைது!

அடுத்த கட்டுரையில்
Show comments