டெஸ்லா காரை ஓட்டி பார்த்த துணை முதல்வர்.. ட்விட்டரில் வெளியிட்ட வீடியோ வைரல்..!

Siva
புதன், 16 ஜூலை 2025 (16:00 IST)
மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, மும்பையில் உள்ள டெஸ்லா கார் ஷோரூமில் வைக்கப்பட்டிருந்த காரை ஓட்டி பார்த்த வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில், அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 
 
நேற்று மும்பையில் டெஸ்லா ஷோரூம் தொடங்கப்பட்ட நிலையில், இந்த ஷோரூமை பார்க்க அதிக அளவில் பொதுமக்கள் குவிந்தனர். இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே டெஸ்லா காரை ஓட்டிப் பார்த்தார். இது குறித்த வீடியோவைத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 
 
டெஸ்லா காரை பாதுகாவலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மத்தியில் அவர் மெதுவாகவும், சீராகவும் பரிசோதனை ஓட்டத்தை ரசித்தார். "இந்தியாவின் முதல் டெஸ்லா அனுபவ மையத்திற்கு வருகை தந்தேன்" என்றும், இந்த அனுபவம் தனக்கு மகிழ்ச்சியாக இருந்தது என்றும் அவர் தனது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.
 
மும்பையில் உள்ள ஷோரூமில் 'மாடல் ஒய்' (Model Y) என்ற எஸ்.யு.வி. (SUV) கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை சுமார் ரூ.60 லட்சம். கருப்பு மற்றும் வெள்ளை கேபினுடன் கூடிய இந்த காரில் தொடுதிரை, வயர்லெஸ் சார்ஜிங், யு.எஸ்.பி. (USB) போர்ட்கள், குரல் கட்டளைகள், இணைய இணைப்பு உள்ளிட்ட பல தொழில்நுட்ப அம்சங்கள் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஊடுருவல்காரர்களை பாதுகாக்கவே SIR பணியை எதிர்க்கின்றனர். அமித்ஷா குற்றச்சாட்டு

மிஸ் யுனிவர்ஸ் 2025: மெக்சிகோவின் ஃபாத்திமா போஷ் வெற்றி

7 கி.மீ. நீளம், 25 மீ. ஆழம், 80 அறைகள்.. ஹமாஸ் சுரங்கத்தை கண்டுபிடித்த இஸ்ரேல் ராணுவம்..!

சக பெண் ஊழியருடன் கள்ளக்காதல்.. மனைவி, 2 குழந்தைகளை தலையணையால் அமுக்கி கொலை..!

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதன்மைத் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு.. தேர்வு தேதி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments