Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் 11 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு: மகாராஷ்டிராவில் பரபரப்பு!

Webdunia
ஞாயிறு, 7 மார்ச் 2021 (21:36 IST)
தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக வேகமாக பரவி வருவதாகவும் இந்த ஐந்து மாநிலங்களில் இருந்துதான் 82 சதவீத கொரோனா நோயாளிகள் இருப்பதாகவும் மத்திய சுகாதாரத் துறை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் எச்சரித்திருந்தது 
 
இந்த ஐந்து மாநிலங்களில் ஒன்றான மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாக பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியுள்ளது 
 
மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 11 ஆயிரத்து 141 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதனை அடுத்து அம்மாநிலத்தில் கொரோனா பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 22 லட்சத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்று ஒரே நாளில் 6 ஆயிரத்து 13 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் 38 பேர் பலியாகியுள்ளதாகவும் மகாராஷ்டிரா மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் ஒரே நாளில் 11 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. வர்த்தகர்கள் மகிழ்ச்சி..!

ஈபிஎஸ் பெயரில் கேரள அரசு அலுவலகத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. அதிர்ச்சி தகவல்..!

விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல: உயர்நீதிமன்றம்

அரசு பள்ளிகளில் இனி காலை உணவில் உப்புமா இல்லை: அமைச்சர் கீதா ஜீவன்

வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை? சுப்ரீம் கோர்ட் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments