Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்வு பயத்தில் தந்தை படுகொலை.. பழியோ பக்கத்து வீட்டுக்காரருக்கு..! – மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

Webdunia
வியாழன், 7 ஏப்ரல் 2022 (11:16 IST)
மத்திய பிரதேசத்தில் தந்தையை கொன்று பழியை பக்கத்து வீட்டுக்காரர் மீது சுமத்திய சிறுவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் குணா பகுதியை சேர்ந்தவர் துலிச்சந்த் அகிர்வார். இவரது மகன் 10ம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த 3ம் தேதி துலிச்சந்த தனது வீட்டில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீஸார் சிறுவனிடம் விசாரித்தபோது பக்கத்துவீட்டு விரேந்திரா தனது வீட்டிலிருந்து வெளியேறுவதை பார்த்ததாக சிறுவன் தெரிவித்துள்ளான்.

ஏற்கனவே இரு வீட்டாருக்கும் மனஸ்தாபம் இருந்து வந்ததால் விரேந்திரா இதை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்த நிலையில், சிறுவனின் செயல்பாடுகள் போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து சிறுவனை துருவி துருவி விசாரித்த நிலையில் சிறுவன் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளான்.

சிறுவன் சரியாக படிப்பதில்லை என துலிச்சந்த தொடர்ந்து அவனை திட்டி வந்துள்ளார். 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் தான் ஃபெயிலாகி இருந்தால் தனது தந்தை அடிப்பார் என்பதால் வெட்டிக் கொன்றதாக சிறுவன் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் மகன் அமெரிக்கன் பள்ளியில் படிக்கலாம், ரசிகர்களுக்கு மும்மொழி கல்வி வேண்டாமா? எச் ராஜா

தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. 2026 தேர்தல் குறித்து ஆலோசனையா?

தமிழகத்தில் தினம் ஒரு பாலியல் குற்றச் செய்தி.. காவல்துறை கைகள் கட்டப்பட்டு உள்ளது: அண்ணாமலை

18 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி: சிஆர்பிஎப் கட்டுப்பாட்டுக்கு வந்தது டெல்லி ரயில் நிலையம்..!

தமிழக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments