வாங்கிய கடனை கொடுக்க முடியவில்லை.. நண்பனிடம் மனைவியை விற்ற கணவன்..!

Mahendran
செவ்வாய், 24 ஜூன் 2025 (18:07 IST)
மத்திய பிரதேச மாநிலம், தார் மாவட்டத்தில் கன்வான் காவல்நிலைய பகுதிக்குட்பட்ட ஒரு கிராமத்தில் வசிக்கும் பெண் ஒருவர், தனது கணவர் மீது இந்தூர் காவல் நிலையத்தில் அதிர்ச்சிகரமான புகார் அளித்துள்ளார். இந்த புகார், இந்தூரில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றத்தின் தீவிரத்தை கருத்தில்கொண்டு, போலீசார் இதை 'பூஜ்ய எஃப்.ஐ.ஆர்' ஆகப் பதிவுசெய்து தார் காவல்துறைக்கு மேல் நடவடிக்கைக்காக அனுப்பியுள்ளனர்.
 
அந்தப் புகாரில், "எனது கணவர் ஒரு சூதாட்டக்காரர். சூதாட்ட பழக்கத்தால் அவருக்கு கடன் அதிகரித்தது. அந்த கடனை அடைப்பதற்காக, தனக்கு பணம் கொடுத்த நண்பர் ஒருவருடன் உடல் உறவு கொள்ளுமாறு கணவர் என்னை கட்டாயப்படுத்தினார்" என்று அந்த பெண் தெரிவித்திருக்கிறார்.
 
இது குறித்து போலீசார் கூறுகையில், "₹50,000 கடனை அடைப்பதற்காக, கணவன் தனது மனைவியை நண்பருக்கு 'விற்றதாக' கூறப்படுகிறது. அதன்பின், அந்த நண்பர் அந்த பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தற்போது தலைமறைவாக உள்ள கணவன் மற்றும் அவரது நண்பர் இருவரையும் பிடிப்பதற்கான தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தனர். 
 
இந்தக் கொடூர சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி கொண்டாட்டம்; சென்னையிலிருந்து மொத்தமாக கிளம்பிய 18 லட்சம் மக்கள்!

24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு! தீபாவளிக்கு இருக்கு செம மழை! - எந்தெந்த மாவட்டங்களில்?

இந்து மதத்தை சேர்ந்த கல்லூரி பெண்கள் ஜிம்முக்கு செல்ல வேண்டாம்: பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு..!

39 பேர் குடும்பங்களுக்கு மட்டுமே ரூ.20 லட்சம் கொடுத்த விஜய்.. 2 குடும்பத்திற்கு ஏன் தரவில்லை?

கரூரில் உயிரிழந்த குடும்பத்தினர்களுக்கு ரூ.20 லட்சம் அனுப்பிய விஜய்.. விரைவில் சந்திப்போம் என கடிதம்..!

அடுத்த கட்டுரையில்