Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல் காந்தியை புகழ்ந்து பேசிய வருண் காந்தி

Webdunia
புதன், 2 ஏப்ரல் 2014 (18:14 IST)
அமேதி தொகுதியில் ராகுல் காந்தியின் பணிகள் மிகவும் பாராட்டுதலுக்கு உரியவை. அதே போன்று நானும் செயல்பட விரும்புகிறேன் என்று பாஜகவை சேர்ந்த வருண் காந்தி பேசியது பாஜக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Varun Gandhi & Rahul Gandhi
பாஜகவை சேர்ந்த வருண் காந்தி, மக்களவை தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இதனை முன்னிட்டு நேற்றிரவு அங்கு நடைபெற்ற ஆசிரியர்கள் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசுகையில், “காங்கிரசின் துணைத் தலைவரும் அமேதி தொகுதியின் வேட்பாளருமான ராகுல் காந்தி அமேதி தொகுதிக்கு தேவையான வசதிகள் அனைத்தையும் சிறப்பாக செய்து கொடுத்திருக்கிறார்.
 
குறிப்பிடத்தக்க அம்சமாக பெண்களின் முன்னேற்றத்திற்கு சுய உதவிக்குழுக்கள் மூலம் அவர் எடுத்து கொண்ட முயற்சிகள் மிகவும் பாராட்டுதலுக்குரியது. நானும் எனது தொகுதிக்கு இதுபோன்ற திட்டங்களை செய்ய விரும்புகிறேன்” என்றார்.
 
வருண் காந்தி ராகுலின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரேபரேலியில் சோனியா காந்தியுடன் மனுத்தாக்கல் செய்ய வந்திருந்த ராகுல் காந்தியிடம், வருணின் பேச்சு குறித்து கேட்டபோது, “வருண் சொல்வது சரிதான். அமேதி தொகுதியில் நாங்கள் மேற்கொண்டு வருகிற முயற்சிகள் மிகவும் சிறப்பானவை. அப்பகுதியில் கல்வியின் நலனுக்காகவும் விவசாயிகளின் நலனுக்காகவும் பல குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒரு கல்வி மையமும், விவசாயிகளுக்காக உணவு கிடங்கும் அமேதியில் அமைக்கப்பட்டுள்ளது.
Varun Gandhi
எங்களது பணிக்கு பாராட்டு கிடைத்தற்கு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். கல்வி மற்றும் விவசாயத்திற்கு அமேதியில் தொடர்ந்து முன்னுரிமை அளிக்கப்படும்” என்று ராகுல் தெரிவித்தார்.

நீதிபதி சுவாமிநாதன் மீது புகார்..! நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றத்திற்கு கொளத்தூர் மணி கடிதம்..!

இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு..! உறவினர்கள் சாலை மறியல் - பதற்றம்..!!

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குக.! இபிஎஸ் வலியுறுத்தல்..!!

அடுத்த 5 நாட்களுக்கு, வெப்பநிலை உயரும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தீ விபத்தில் 33 பேர் உயிரிழந்த விவகாரம்..! தாமாக முன்வந்து விசாரிக்கும் குஜராத் நீதிமன்றம்..!

Show comments