Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தனது காதலியுடனான செக்ஸ் வீடியோவை வாட்ஸ்–அப்பில் அனுப்பிய வாலிபர்

தனது காதலியுடனான செக்ஸ் வீடியோவை வாட்ஸ்–அப்பில் அனுப்பிய வாலிபர்
, வெள்ளி, 20 பிப்ரவரி 2015 (14:37 IST)
ஆந்திர மாநிலத்தில், தனது காதலியுடனான செக்ஸ் வீடியோவை வாட்ஸ்–அப்பில் அனுப்பிய வாலிபரை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.
 
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள பாயகாபுரம் பகுதியை சேர்ந்த 19 வயது பெண், அதே பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய சேசு என்ற வாலிபரை காதலித்து வந்தார்.
 
அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துவந்துள்ளனர்.
 
இந்நிலையில், காதலியுடன் உல்லாசமாக இருந்ததை சேசு தனது செல்போனில் படம் எடுத்துள்ளார். இந்த செக்ஸ் வீடியோ காட்சியை 'வாட்ஸ்அப்' மூலம் தனது நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார். அந்த வீடியோ காட்டுத் தீ போல அப்பகுதி முழுவதும் பரவியதாகக் கூறப்படுகிறது.
 
இதைத் தொடர்ந்து, அகில பாரத மகளிர் அமைப்பு இந்த பிரச்சனை தொடர்பாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், அந்த வாலிபரை கைது செய்ய வேண்டும் என்றும் பாயகாபுரம் காவல்துறையினரிடம் புகார் செய்தனர்.
 
இந்தப் புகாரின் பேரில்,  காவல்துறை  ஆய்வாளர் சகேராபேகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
 
இந்நிலையில், தலைமறைவான வாலிபர் சேசுவை கைது செய்யாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அந்த மகளில் அமைப்பினர் முடிவு செய்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil