Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிச்சைக்காரருக்கு அடித்த யோகம்: கேரள லாட்டரியில் ரூ.65 லட்சம் பரிசு

Webdunia
வெள்ளி, 1 ஏப்ரல் 2016 (11:53 IST)
ஆந்திராவைச் சேர்ந்த பிச்சைக்காரர் ஒருவருக்கு கேரள லாட்டரியில் ரூ 65 லட்சம் பரிசு விழுந்துள்ளது.


 

 
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம், கொரப்பாடு கிராமத்தைச் சேர்ந்தவர் பென்னய்யா. இவர் கல்குவாரியில் வேலை செய்து வந்தார்.
 
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கல் குவாரியில் நடந்த ஒரு விபத்தில் பென்னைய்யா தனது ஒரு காலை இழந்தார்.
 
இதனால், அவரால் வேலைக்குச் சென்று வருமானம் ஈட்டமுடியாமல், சொந்த ஊரில் இருந்து கேரள மாநிலத்திற்குச் சென்றார்.
 
அங்கு, திருவனந்தபுரம் மாவட்டம் பாறசாலை பகுதியில் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்தார். அவருக்கு லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் இருந்தது. அதன்படி தொடர்ந்து, லாட்டரி சீட்டு வாங்கினார்.
 
இந்நிலையில், அவர் வாங்கிய அக்ஷயா லாட்டரி சீட்டுக்கு முதல் பரிசான ரூ.65 லட்சம் கிடைத்தது. 
 
இதைத் தொடர்ந்து, வீடின்றி தெருவில் வசித்து வந்த அவரை காவல்துறையினர் நேரில் வந்து காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
 
அவருக்கு வங்கியில் கணக்கு இல்லாததால், அவருக்கு ஏதேனும் ஒரு வங்கியில் கணக்கு தொடங்கப்பட்டு லாட்டரி பணத்தை டெபாசிட் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் கூறினார்.
 
இது குறித்து, பென்னய்யா கூறுகையில், இந்த பரிசு தொகையை வைத்து, சொந்த ஊரில் சொந்தமாக ஒரு கடை வைத்து சந்தோஷமாக வழ விரும்புகிறேன் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

தேர்தல் பரபரப்பு மற்றும் ஐபிஎல்.. தெலுங்கானாவில் மூடப்படும் திரையரங்குகள்..!

இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்.. முதல் முறையாக குடியுரிமை பெற்ற 14 பேர்..!

இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை பெய்யும்: எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

Show comments