Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆரம்பமே அபாரம்.. 150ஐ தாண்டியது பாஜக கூட்டணி.. பின்னாடியே வரும் இந்தியா கூட்டணி..!

Siva
செவ்வாய், 4 ஜூன் 2024 (08:20 IST)
பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வரும் நிலையில் முன்னணி நிலவரங்கள் வந்து கொண்டிருக்கின்றன. 
 
அதன்படி பாஜக கூட்டணி தற்போது 157 தொகுதிகளில் முன்னிலையில் இருப்பதாகவும் இந்தியா கூட்டணி 62 தொகுதிகளில் முன்னிலையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன 
 
தமிழகத்தை பொறுத்த வரை திமுக 13 இடங்களில் முன்னணியில் உள்ளன என்பதும் மற்ற கட்சிகள் முன்னிலையில் இல்லை என்றும் முதல் கட்ட முடிவு வந்திருக்கின்றன
 
மத்தியில் ஆட்சி அமைக்க 273 தொகுதிகள் தேவை என்ற நிலையில் தற்போது பாஜக கூட்டணி 157 தொகுதிகளில் முன்னிலையில் இருப்பதால் இன்னும் ஒரு சில மணி நேரத்தில் ஆட்சி அமைக்க தேவையான இடங்களை அந்த கூட்டணி கைப்பற்றி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
ஆனால் அதே நேரத்தில் இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய சரிவு என்று சொல்ல முடியாத அளவுக்கு வாக்குகள் கிடைத்துள்ளது என்பதும் அந்த கூட்டணியும் பின்னாடியே வந்து கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இன்னும் ஒரு நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் என்பதால் ஆட்சி அமைப்பது யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments