Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எழுத்துப்பிழை கடிதம்: மீண்டும் சர்ச்சையில் சிக்கிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி

Webdunia
ஞாயிறு, 23 ஆகஸ்ட் 2015 (01:19 IST)
எழுத்துப்பிழையுடன் கூடிய கடிதம் அனுப்பி, மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி.
 

 
மத்திய அரசின் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. தேர்வில், சிறப்பான தேர்ச்சி அடைந்த டெல்லியில் உள்ள பள்ளி ஒன்றுக்கு, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி ஒரு பாராட்டு கடிதம் அனுப்பிவைத்தார்.
 
அந்தக் கடிதத்தில் அமைச்சரின் பெயர் இந்தியில் எழுத்துப் பிழையுடன் உள்ளது. மேலும், மினிஸ்டர் என்ற ஆங்கில வார்த்தையிலும், சன்சதன் என்ற இந்தி வார்த்தையிலும் எழுத்துப் பிழை காணப்படுகிறது.
 
இந்த கடிதத்தை பெற்ற அந்த பள்ளியை சேர்ந்த ரிச்சா குமார் என்ற ஆசிரியை, தனது ஃபேஸ் புக்கில், அமைச்சரின் பாராட்டுக்கு நன்றி தெரிவித்ததோடு, கடிதத்தில் உள்ள  எழுத்துப்பிழைகளையும் அம்பலப்படுத்தியுள்ளார்.
 
இந்த சம்பவம், டெல்லியில் மட்டுமின்றி, இந்தியா முழுமைக்கும் பெரும் சர்ச்சையை  ஏற்படுத்தியுள்ளது. 
 

ஏர் இந்தியா விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல்..! அதிர்ச்சி அடைந்த பணிகள்..!!

ஐக்கூவின் அட்டகாசமான பட்ஜெட் 5ஜி ஸ்மார்ட்போன் iQOO Z9x 5G! – சிறப்பம்சங்கள் என்ன?

காவிரி நீர் கூட்டத்தில் அதிகாரிகள் ஆன்லைன் வாயிலாக பங்கேற்பதா..? தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

விடுதலைப்புலிகள் வீரவணக்கம் செலுத்துவதே இல்லை! – பிரபாகரனின் சகோதரர் சொன்ன அதிர்ச்சி தகவல்!

ஹெல்மெட் அணிந்து கார் ஓட்டும் உத்தரபிரதேச வாலிபர்.. அபராதத்தை தவிர்க்க என பேட்டி..!

Show comments