Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடிக்கு எதிராக டிவிட்டரில் லாலு கிளப்பிய புயல்

Webdunia
திங்கள், 5 அக்டோபர் 2015 (00:12 IST)
மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு, ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ் கிளப்பிய புயல் நாட்டையே அதிர வைத்துள்ளது.
 

 
அண்ணல் மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு, ராஷ்டிரிய ஜனதாதள தலைவரும், பீகார் முன்னாள் முதலமைச்சருமான லாலு பிரசாத் யாதவ், தனது டிவிட்டர் பக்கத்தில், மகாத்மா காந்தியை வணங்கி மரியாதை செலுத்தினார். மேலும், நாட்டுக்காக விடுதலை பெற்றுத்தந்த தந்தை என பாராட்டும் தெரிவித்துள்ளார்.
 
இந்த நிலையில், அந்த பதிவில், மகாத்மா காந்தியை சுடுக்கொன்றது யார்? கோட்சே என்று இந்தியா முழுமைக்கும், ஏன், உலகம் முழுக்க தெரியும். ஆனால் கோட்சேவை  வழிபடுவது யார்? ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள்.
 
சரி, ஆர்.எஸ்.எஸ். சொல்வதுதான் வேதவாக்கு என செயல்படுவது யார்? பாஜக அந்த பாஜகவை இயக்குவது யார்? நரேந்திர மோடி. அப்படி என்றால், மகாத்மா காந்தியை கொன்ற கொலையாளி யார்? என அதிரடிபுதிராடியாக புயல் கிளப்பிவிட்டார்.

மோடியை மறைமுகமாகவும், நேரடியாகவும் தாக்குதல் நடத்திய லாலு மீது கடும் கோபத்தில் உள்ள, பாஜகவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் தகுந்த பதிலடி கொடுக்க தயாராகி வருகிறது.
 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments